வில்சன் சைலஸ்
பட்டக்கல்வி பயிலவில்லை. சான்றிதழ்களும் கிடையாது. ஐந்து வயதில் தொடங்கிய இவரது கலை ஆர்வம், அனைத் துலக தாளவாத்தியக் கருவிகள் சிங்கப்பூரிலும் அறிமுகமாவதற் கான காரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உள்ளூர், வெளியூர் மேடை களில் தமது கலைத் திறனை அசாத்தியமாக வெளிப்படுத்தி யுள்ள 50 வயது திரு முகம்மது நூர், எஸ்பிளனேட் கலை அரங் கைத் தமது தாளவாத்திய இசை யால் இன்று மாலை அதிர வைக்க விருக்கிறார்.
எஸ்பிளனேட் கலை அரங்கு டன் தொடக்கத்திலிருந்து பய ணம் செய்துள்ள இவருக்கு கலா உத்சவ விழாவில் இந்த ஆண்டு பங்கேற்பது மறக்க முடியாத ஓர் அனுபவமாக உள்ளது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட எஸ்பிள னேட் கலை அரங்கில் தொடக்க நிகழ்ச்சியாக எனது தாளவாத்திய இசை விருந்து இடம்பெற்றது இன்னும் நினைவில் உள்ளது," என்ற அவர், 15 ஆண்டு நிறை வைக் கொண்டாடும் எஸ்பிளனேட் அரங்குடன் பயணம் செய்த ஆண்டுகளை நினைவுகூர்கிறார்.
கலைஞர்களுக்குச் சிறந்த தளமாக விளங்கும் எஸ்பிளனேட் அரங்கில் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை திரு நூர் இதுவரை படைத்துள்ளார்.

