பரதநாட்டியத்தைப் பற்றிய கண்காட்சி, நடன நிகழ்ச்சி

பரதநாட்டியத்தைப் பற்றிய கண்காட்சி, நடன நிகழ்ச்சி

1 mins read
162376f1-2bba-45eb-af2c-b6f112a38b33
-

சுதாஸகி ராமன்

பாரம்பரிய இந்தியக் கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தை சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறார் நடன மணியும் நடன ஆசிரியருமான திருமதி துர்கா மணிமாறன், 38. கடந்த 19 ஆண்டுகளாக நடனம் கற்பித்து வரும் அவர், பரத நாட்டியத்தைப் பற்றியும் நடன மணிகளைப் பற்றியும் 'பரம்பரா' என்ற ஒரு நிகழ்ச்சியில் விளக்க உள்ளார். நாட்டிய நாடகம், கண்காட்சி, கலந்துரையாடல் ஆகிய அங்கங்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நடனப் பயிற்சியைக் கற்றுள்ள அவர், தாம் கற்றுக் கொண்ட முறை இக்காலச் சிறுவர்கள் அக்கலையைக் கற்றுக் கொள்ளும் விதத்திலிருந்து மாறு பட்டு உள்ளதைச் சுட்டினார்.

தமது மாணவி களுடன் திருமதி துர்கா மணிமாறன் (வலது). படம் லிங்கேஷ் கருணாகரன்