'ஹேக்கர்கள்' எனப்படும் இணைய ஊடுருவிகள் முன்னர் நுழைந்து முடக்கிய ஓர் இணையத்தளத் திற்குப் பயனீட்டாளர்கள் செல்ல முயன்றால் கவனமாக இருக்கும் படி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய வசதியை மோஸிலா ஃபயர் ஃபாக்ஸ் உலாவி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிகராகத் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதற்காக இணைய ஊடுரு விகள் அதிக அளவில் போலி யான இணையத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாக்க ஃபயர்ஃபாக்ஸ் உலா வியில் புதிய அம்சம் ஒன்று அறிமுகமாகவுள்ளது.
பாதுகாப்புப் பிரச்சினை: எச்சரிக்கும் உலாவி
1 mins read
-

