வில்சன் சைலஸ்
விருப்பமானவற்றைச் செய்ய அனுமதிக்கப்படாத பதின்ம வயது பிள்ளைகளுக்கும் தேவையற்ற அச்சத்தால் குறுகிய மனப் பான்மையைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள போராட்டத்தை ஆக அண்மையில் வெளியான 'கொலுசு' எனும் குறும்படம் எடுத்துக் காட்டுகிறது. எஸ்பிளனேட் கலை அரங்கில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இந்தக் குறும்படம், அளவுக்கு அதிகமாக அடக்குமுறையைக் கையாளும் அம்மாவால் பிடிக்காத வற்றை செய்ய கட்டாயப் படுத்தப்படும் 'ரஞ்சனி' என்ற பதின்ம வயது பெண்ணின் எதிர்பாராத முடிவைக் கதையாகக் கொண்டுள்ளது. விவாதத்துக்குரிய இந்தக் குறும்படம் குறித்த கலந்துரை யாடல் தேசிய நூலக வாரியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பதின்ம வயதினர் உட்பட பெற்றோரும் ஆசிரியர்களும் பங்கேற்று குறும்படம் பற்றியும் பெற்றோர், பிள்ளை உறவு குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தேசிய நூலக வாரியத்தில் நேற்று நடைபெற்ற 'கொலுசு' குறும்படக் கலந்துரையாடலில் (இடமிருந்து) அதன் இயக்குநரும் தயாரிப்பாளருமான சலீம் ஹாடி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுகந்தி, எட்மன் ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆலோசகர் திரு கணேசன் ராமசாமி. படம்: எஸ்.ஐ.டி.எஃப்.இ

