முதலுதவி என்பது உடலில் காயமடைந்தவர்களுக்கு மட்டுமல்ல, மனதில் காயமடைந்த வர்களுக்கும் அவசியம் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே போதுமான அளவு ஏற்படவில்லை. 'முதலுதவி' என்பது முக்கிய மானது. சாலைகளில் யாராவது விபத்தில் சிக்கியிருந்தால், உடனே அவருக்கு முதலுதவி அளித்து அவரைக் காப்பாற்ற தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், உடலில் காயமுற்ற பலரும் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் .
ஆனால் முதலுதவி என்பது உடலில் காயமடைந்தவர்களுக்கு மட்டுமல்ல, மனதில் காயமடைந்த வர்களுக்கும் அவசியம். விபத்துகள் அதிகரித்துக் கொண்டிருப்பதுபோல், தற்கொலை களும் அதிகரித்துக்கொண் டிருக்கிறது. இரண்டுமே போட்டிபோட்டு விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. எனவே விபத்துகளில் சிக்கியவர்களின் உடலுக்கு மட்டுமல்ல, மன அழுத்தத்தில் சிக்கி இருப்பவர்களின் மன துக்கும் முதலுதவி தேவை என்ற கட்டாயம் உருவாகியிருக்கிறது. நெருக்கமானவர்களின் மனதுக்கு முதலுதவி அளிக்கும் வழிமுறைகளைக் கற்றுக் கொள்வது நல்லது.

