சுதாஸகி ராமன்
சுவையான கதையோட்டம், துடிப்பான கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்களின் மனங்களை கவர வசந்தம் ஒளிவழியில் மீண்டும் தொடங்கி உள்ளது பிரபல உள்ளூர் தொலைக்காட்சித் தொடர் 'வேட்டை'. விக்னேஷ், ஈஸ்வரி, புரவலன், குணா போன்ற நன்கு அறிமுக மான நடிகர்களுடன் 'வேட்டை' தொடரின் நான்காவது பருவத்தில் நான்கு இளம் கலைஞர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வகையில் தவனேசன் சிவநாதன், மகாலட்சுமி சுதர் சனன், த.மாலினி, சேஷன் ஆகிய நால்வர் இம்முறை 'வேட்டை' தொடரில் போலிஸ் அதிகாரி களாக முக்கிய கதாபாத்திரங் களை ஏற்று நடிக்கின்றனர்.

