சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தை இன்னும் 40 ஆண்டுகளில் படிப் பில், வாழ்க்கைத்தரத்தில், பண்பு நெறிகளில், சாதனைகளில் முன் னணி சமூகமாக உருவாக்கும் புதிய இலக்குடன் புதிய பய ணத்தை சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் தொடங்கியுள்ளது. இந்த இலக்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய இந்த மன் றத்தின் மதியுரைஞர் முனைவர் அ வீரமணி, 70, சிங்கப்பூர் தமிழ் சமுதாயமும் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் குறிப்பாக இளையர் கள் இந்த மன்றத்தில் சேர்ந்து தீவிர பங்காற்றி இந்த இலக்கு நிறைவேற பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் 60வது நிறைவு விழா நிகழ்ச்சியில் முனைவர் வீரமணி உரையாற்றினார். இந்தியர் மர புடைமை நிலையத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் 1,266 பக்கங் களைக்கொண்ட 'புதிய சமுதாயம்' என்ற வரலாற்று நூல் வெளியிடப் பட்டது.
சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் மதியுரைஞர் அ வீரமணி, இந்திய மரபுடைமை நிலையத்தில் புதிய புத்தகத்தை வெளியிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

