முத்தமிழறிஞர் விபுலானந்த அடிகளார் ஆவணப்படம்

முத்தமிழறிஞர் விபுலானந்த அடிகளார் ஆவணப்படம்

1 mins read

திரு விபுலானந்தர், ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மட்டக் களப்பில் பிறந்தவர். கொழும்பிலும், தமிழ் நாட்டிலும் படித்தவர். சைவ, இஸ்லாமிய, கிறிஸ்துவ சமய ஒற்றுமைக்குப் பாடுபட்டதோடு, எல்லாச் சமயங் களும் சமம் என்ற பார்வையுடைய நல்லிணக்க நாயகர். அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், இலங்கையிலும் பணியாற்றிய முத்தமிழ் அறிஞர் விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாறு, செய்த தமிழ்த் தொண்டு, அரிய கண்டு பிடிப்பு ஆகிய சிறப்புகளை உள்ளடக்கிய 50 நிமிட ஆவணப் படம் ஒன்றை, புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தயாரித்துள் ளார்.

இந்த ஆவணப்படத்தைக் கங்கைகொண்டான் கழகத்தின் உதவியோடு கவிமாலை அமைப்பு சிங்கப்பூரில் வெளியீடு செய் கிறது. ஆண்டின் இறுதி நாளான நாளை 31.12.2017 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு, சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்தபவன் உணவகத்தின் மாடியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனைவரும் வருகை புரிந்து பயன்பெறலாம். நிகழ்ச்சி குறித்து மேல் விவரங்கள் அறிய 9005 3043 எனும் கைபேசி எண் மூலம் திரு மா. அன்பழகனுடன் தொடர்புகொள்ளலாம்.