சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்

சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்

1 mins read
5fbd5f7a-eb03-4cfb-ab5c-66daef7f057f
-

இலங்கை தமிழறிஞர் விபுலாநந்த அடிகளாரின் ஆவணப்பட வெளியீட்டு விழா ஆனந்தபவன் உணவக மாடியில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் நடைபெற் றது. சிங்கப்பூரில் உள்ள கங்கை கொண்டான் கழகமும் கவிமாலை இலக்கிய அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியில் விபுலாநந்த அடி களார் ஆவணப்படத்தின் ஒளி வட்டை முன்னாள் நியமன நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன் வெளியிட, சிங்கப்பூர் ஹனிஃபா வணிக நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.

முனைவர் சுப.திண்ணப்பன் ஆவணப்படத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து அறிமுகம் செய்தார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் படப்பிடிப்பு அனுபவங்களையும் ஆவணப்படத் தின் நோக்கங்களையும் எடுத்து உரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கள், பல்வேறு தமிழமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன் (வலது) வெளியிட, ஹனிஃபா நிறுவனங்களின் உரிமையாளர் முகமது ஹனிபா (நடுவில்) பெற்றுக்கொண்டார். ஆவணப்படத்தின் இயக்குநர் மு.இளங்கோவன் உடனிருக்கிறார்.