பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

1 mins read

கேம்பல் லேனில் நடைபெற்று வரும் பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக லிஷா அமைப்பும் சிங்கப்பூர் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து பொங்கல் சிறப்புப் பட்டிமன்றத்தை இம்மாதம் 13ம் தேதி மாலை நடத்தின. 'சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது ஆண்களே! பெண்களே!!' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பட்டிமன்றத்தை வழிடநடத்தினார். 'ஆண்களே!' என்ற அணியில் அழகுநிலா பஞ்சாட்டரம், இரவிச்சந்திரன் சோமு, அகிலா ஹரிஹரன் ஆகியோர் வாதிட்டனர். 'பெண்களே!!' என்ற அணியில் இராம்குமார் சந்தானம், திலகராணி, கண்ணன் சேஷாத்ரி ஆகியோர் வாதிட்டனர். 'பெண்களே!' என வாதிட்ட அணி வென்றது. சிங்கப்பூர் பட்டிமன்றக் கலைக் கழகத் தலைவர் ரஜீத் ராவுத்தர் பங்கேற்பாளர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கினார். படம்: லிஷா