மொழித்திறன் போட்டிகள்

மொழித்திறன் போட்டிகள்

1 mins read

தொடக்கப்பள்ளி மாணவர்களுக் கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழுவின் ஏற்பாட்டில் டெப்பொ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலய பலநோக்கு மண்டபங்களில் நடத் தப்படவுள்ளன. 28/1/2018, 3/2/2018, 11/2/2018, 24/2/2018, 3/3/2018 , 10/3/2018 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் போட்டிகள் நடைபெறும். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கதை சொல்லும் போட்டி, வாசிப்புப் போட்டி, பாட்டுப்போட்டி ஆகிய போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து தொடக் கப்பள்ளிகளுக்கும் அனுப்பிவைக் கப்பட்டுள்ளன. போட்டிகளில் பங்கேற்பதற் கான மாணவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை 22/1/2018 ஆம் தேதிக்குள் தெலுக் பிளாங்கா சமூக மன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். இந்த மொழித்திறன் போட்டி கள் பற்றிய மேல் விவரங்களுக்கு திரு கி இராமமூர்த்தியை 81184671 என்ற கைபேசி எண்ணில் அழைக்கலாம்.