சுதாஸகி ராமன்
பரப்பரப்பான லிட்டில் இந்தியாவின் அப்பர் டிக்சன் சாலையில் சுவ ரோரமாக உள்ள ஒட்டுக்கடை ஒன்றில் தமிழகத்தின் சஞ்சிகை களையும் சிங்கப்பூரின் நாளிதழ் களையும் விற்று வருகிறார் ஒரு முதியவர். கடந்த சுமார் 30 ஆண்டு களாக 'சியாமளா' என்ற பெயரில் புத்தக்கடையை அங்கு நடத்தி வரும் அந்த 71 வயது முதியவர் திரு மாணிக்க பிள்ளை கோவிந் தசாமி. மங்கிய நிறத்துடன் மிகப் பழமையான தோற்றத்துடன் காட்சி அளித்த அவரது ஒட்டுக்கடை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. ஒட்டுக்கடையை சுற்றியுள்ள சுவரை வண்ண சுவரோவியங்கள் இப்போது அலங்கரிக்கின்றன. லிட்டில் இந்தியா வட்டாரத்திற்கு ஆண்டுதோறும் குதூகலத்தை கொண்டு சேர்க்கும் 'ஆர்ட் வாக் லிட்டில் இந்தியா' எனும் கலை நிகழ்ச்சி தொகுப்பின் ஓர் அங்க மாக சியாமளா புத்தகக் கடையைச் சுற்றியுள்ள சுவர்களில் சிறப்புச் சுவரோவியங்கள் தீட்டப் பட்டுள்ளன.
மக்கள் அனைவரும் ரசிக்கக் கூடிய இந்தச் சுவரோவியங்களு டன் கலை நிகழ்ச்சிகள், பட் டறைகள் என லிட்டில் இந்தியா வின் எழிலையும் வரலாற்றையும் பறைசாற்றும் நடவடிக்கைகள் இம் மாதம் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது.
பழைய சுவரில் தீட்டப்பட்ட ஓவியம் கடையின் தோற்றத்தையே மாற்றிவிட்டது. படம்: கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபுஷன்

