மாபெரும் குடமுழுக்கு விழா

மாபெரும் குடமுழுக்கு விழா

1 mins read
3f7bf67a-a6c7-449f-8e95-18a0f4af3ddf
-
Google News Preferred Icon

வில்சன் சைலஸ்

முன்பு கேன்பரா வட்டாரத்திலும் தற்போது யீ‌ஷூன் வட்டாரத் திலும் கடந்த 54 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயி லின் நான்காவது மாபெரும் குடமுழுக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 11ஆம் தேதி) நடைபெறவிருக்கிறது. 1964ஆம் ஆண்டு கேன்பரா ரோட்டில் இலந்தைமரத்துக்குக் கீழே ஒரு சிறிய கோயிலாக உருவெடுத்த இவ்வாலயத்தின் முதல் குடகுழுக்கு 1971லிலும் இரண்டாம் குடமுழுக்கு 1977லிலும் மூன்றாம் குட முழுக்கு 1999ஆம் ஆண்டிலும் நடைபெற்றன.

1996ஆம் ஆண்டு ஜனவரி யில் இவ்வாலயம் கேன்பரா ரோடு பகுதியிலிருந்து தற் போதைய யீ‌ஷூன் தொழிற் பேட்டை 'ஏ'க்கு இடமாற்றம் கண்டது. 1967ஆம் ஆண்டில் பங்குனி உத்திரத் திரு விழா இவ்வாலயத் தில் நடத்தப்பட்டது முதல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களை அத்திருவிழா மூலம் ஈர்க்கும் ஆலயமாக புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிர மணியர் கோயில் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.