வரலாற்றில் இடம்பிடித்த கமலா மன்றம்

வரலாற்றில் இடம்பிடித்த கமலா மன்றம்

1 mins read
b136af74-9cef-4e0d-8e98-3f95d6929b0e
-

இந்தியர்கள் பலர் 1900ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் மேம்பட்ட வாழ்வு தேடி சிங்கப் பூருக்கு வந்தனர். அவர்களில் பல ஆடவர் கல்வி, சட்டம், மருத் துவத் துறைகளில் பணிபுரிந்தனர். அவர்களது மனைவிமார் பகல், பிற்பகல் வேளைகளில் ஒன்றுகூடி உரையாடி வந்தனர். அதன் விளைவாக 'லோட்டஸ் மன்றம்', 'லேடீஸ் யூனியன்' ஆகிய இரண்டு பெண்கள் மன்றங்கள் உருவாகின. இந்தியப் பெண்கள் சந்தித்து உரையாடுவது, பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடு படுவது ஆகியன அந்த அமைப்பு களின் நோக்கங்களாக இருந்தன. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த திருமதி சு‌ஷிலா நாயர், 81, தமது 20ஆம் வயதில் 1957ஆம் ஆண்டு தமது திருமணத்திற்குப் பிறகு கமலா மன்றத்தில் இணைந்ததாக 'தப்லா'வுடனான நேர்காணலில் குறிப்பிட்டார்.

68 வயதான 'கமலா மன்றம்' இன்றும் இந்திய மகளிருக்கான ஒன்றுகூடல் மையமாகவும் அறப்பணி செயல்பாடுகளுக்கான இடமாகவும் இருந்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1950ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு முதன்முதலாக வந்தபோது அவருக்கு 'லோட்டஸ்' மன்ற உறுப்பினர் திருவாட்டி குஞ்சிலட்சுமி அம்மா மாலை அணிவித்து மரியாதை செய்தார். திரு நேருவின் ஆலோசனைப்படி 'லோட்டஸ்' மன்றம் 'லேடீஸ் யூனியனு'டன் இணைந்து 'கமலா மன்றம்' உருவானது. படம்: கமலா மன்றம்