இசை எஃப்எம் இசைத் திருவிழா

1 mins read
f9b78306-11f2-4ac9-8e97-5de4aafebff6
-

'பிக் பாஸ்' புகழ் ஓவியா ஹெலன், ஜுலி, ரைசா, சுஜா வருணீ, ஸ்நேகன் கலந்துகொள்ளும் இசை எஃப்எம் இசைத் திருவிழா இன்று மாலை 5 மணி முதல் சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. 'மசாலா காஃபி' இசைக் குழுவினரின் இசையில் பாடகர் ஹரிசரண் மற்றும் அவரது குழுவினரும் கலந்துகொள்கின்றனர். பாடகர் விஜய் பிரகாஷ், நிஹா, சுனிதா சாரதி இசைக் குழுவும் பங்குபெறுவர். வயலின் வாசகர் சப்ரீ‌ஷின் கச்சேரியும் உண்டு. நுழைவுச் சீட்டுகளுக்கு 93202470 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது sistic.com இணையத்தளத்திலோ தேக்காவில் உள்ள 'பிக் பாஸ்' உணவகத்திலோ ஜோதி மியூசிக் கார்னரிலோ வாங்கலாம்.