செயிண்ட் ஹில்டாஸில் தமிழ்ச் செய்திப் பயிலரங்கு

செயிண்ட் ஹில்டாஸில் தமிழ்ச் செய்திப் பயிலரங்கு

1 mins read
b9f3e810-3cc9-4bfe-a278-527ae51af6d8
-
Google News Preferred Icon

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகத் தமிழ்ச் செய்திப் பயிலரங்கு ஒன்று செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக் கிழமை நடத்தப்பட்ட அந்தப் பயிலரங்கில் கிட்டத்தட்ட 60 மாணவர்கள் பங்கேற்றனர். செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளியின் தலைமை யாசிரியரும் தமிழாசிரியர் திரு ஆர் அர்ஜுனனும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அந்த அரைநாள் பயிலரங்கை நடத்தியது. கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுத்துறையின் தாய் மொழிப் பிரிவு துணை இயக்குநர் திருமதி சாந்தி செல்லப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.

செய்தித் தயாரிப்பில் அச்சு, வானொலி, தொலைக்காட்சி ஆகிய மூன்று ஊடகங்களிலும் ஏறத்தாழ 40 ஆண்டு அனுபவம் கொண்ட திரு நா.ஆண்டியப்பன், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பதில் 30 ஆண்டுக்கு மேலாக அனுபவம் கொண்ட திரு பொன்.சுந்தரராசு, மொழிபெயர்ப்புத் துறையில் பத்தாண்டுக்கு மேலாக அனுபவம் கொண்ட திருமதி கிருத்திகா ஆகிய மூவரும் அப்பயிலரங்கை நடத்தினர்.

மாணவர்களிடம் உரையாற்றும் சிறப்பு விருந்தினர் திருமதி சாந்தி செல்லப்பன். படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்