தேசிய கவிதை விழா: நான்கு மொழிகளில் கவிதைப் போட்டி

தேசிய கவிதை விழா: நான்கு மொழிகளில் கவிதைப் போட்டி

2 mins read

சிங்கப்பூர் தேசிய கவிதை விழாவை முன்னிட்டு, நான்கு மொழிகளில் கவிதைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 13 முதல் 18 வயது வரையுள்ளோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவு களாக நடைபெறும் இப்போட்டி யில் ஆர்வமுடைய சிங்கப்பூரர் களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம். 'In Spirit' (மெய்ப்பொருள்/ உணர்வுபூர்வமாக) எனும் கருப்பொருளை ஒட்டி கவிதை கள் எழுதப்பட வேண்டும். தலைப்பு எதுவாகவும் இருக்க லாம். கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டிய இறுதிநாள் அடுத்த மாதம் 31ஆம் தேதி. கவிதைகள் 40 வரி களுக்குள் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் போட்டி யில் வெற்றி பெறும் மூன்று கவிதைகளுக்கு ரொக்கப் பரிசுகள் உண்டு. மொத்தம் $6,400 ரொக்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு $500, இரண்டாம் பரிசு $200, மூன்றாம் பரிசு $100 ஆகியவற்றுடன் புத்தக பரிசுகளும் பற்றுச் சீட்டுகளும் வழங்கப்படும். மேலும் தேர்வுபெறும் கவிதை கள் நான்குமொழித் தொகுப் பிலும் இடம்பெறும். தேர்வு பெறும் கவிதைகளை எழுதியோர் பின்னர் ஆங் கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அத்துடன் தேர்வு பெறும் கவிதைகள் தேசிய கவிதை விழாவில் வாசிக்கப்படும். மேல் விவரங்களுக்கு https:// w w w . p o e t r y f e s t i v a l . s g / national-poetry-competition என்ற இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.