உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் (உத்தமம்) அடுத்த தமிழ் இணைய மாநாடு (2018) வரும் ஜூலை 6 முதல் 8ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டின் தொழில்நுட்ப கருத்தரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தமிழ்க்கணினி ஆய்வாளர்கள் படைக்கலாம்.
சு வி ட் ச ர் லா ந் தி லு ள் ள லோசானின் தேசியத் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் பணி புரியும் டாக்டர் கே.கல்யாண சுந்தரம் (உத்தமத்தின் முன்னாள் தலைவர்) மாநாட்டுக் கருத்தரங்கு குழுவின் தலைவராக நியமிக் கப்பட்டுள்ளார். மேலும் முன்பு நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளைப் போல் இம்முறையும் தமிழ் மொழியில் கணினி பயன்பாடு, தொழில்நுட்பம்/ தகவல் தொழில் நுட்பம், கணினி உதவியுடன் தமிழ் மொழி கற்றல் - கற்பித்தல், தமிழ் இணையம் உள்ளடக்கம், தேடு பொறிகள், மின்னூலகங் கள், தமிழ் இணைய வளர்ச்சி, மேலாண்மை போன்ற தலைப்பு களில் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. மாநாட்டில் வழங்குவதற்கான கட்டுரைகளின் சுருக்கங்களை cpc2018@infitt.org என்ற முகவரிக்கு இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேல் விவரங்களுக்கு மணியத்தை 9780 5920 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

