சிறாரும் பெற்றோரும் கூடிக் களித்த கதைக்களம்

1 mins read
94e1b873-f48a-44fe-8780-18b3789e9daf
-

"கதை கேளு! கதை சொல்லு" என்ற குழந்தைகளுக்கான கதை சொல்லும் பயிலரங்கை சிங்கப் பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் சிறப்பாக ஏற்று நடத்தியது. 'TEXTURES-சொற்களோடு ஒரு வாரயிறுதி' எனும் கருப் பொருளில் தி ஆர்ட்ஸ் ஹவுஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி களில் ஒன்றாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கு கதைகளுடன் தமிழ், தன்னம் பிக்கை, குடும்பப் பிணைப்பு போன்றவை பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டன. இந்தப் பயிலரங்கில் சிறுவர்கள் கதை சொல்வதைப் பார்த்துத் தாங்களும் சிறந்த முறையில் கதை சொல்ல மற்ற சிறுவர்கள் கற்றுக்கொண்டனர். முதலில் ஏழு தொடக்கநிலை மாணவர்கள் அரங்கத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் தெளிவான தமிழ் உச்சரிப்போடும் நவரச ரசனையுடன் குரல்களை மாற்றியும் கதைகளைச் சொல்லி அரங்கை அதிர வைத்தனர்.