இந்தியர்களிடையே ஆரோக்கிய மான, துடிப்புமிகுந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வண் ணம் நாளை ஞாயிற்றுக்கிழமை சாலைக்காட்சிக்கு ஏற்பாடு செய் துள்ளது மீடியார்கார்ப் வசந்தம். 'ஹலோ ஹலோ சுகமா' நிகழ்ச்சியை முன்னிட்டு யீஷூன் ரிங் ரோடு புளோக் 165 அருகே யுள்ள பன்னோக்கு அரங்கில் நடைபெறும் சாலைக்காட்சியில் இலவச சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்வதுடன் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பரிசுகளையும் வெல்லலாம். சமையல் வல்லுநர்களான ஷெவ் பாலா, ஷெவ் அரிஃபின் ஆகியோரின் கைவண்ணத்தில் நேரடியாக சமையல் செயல் முறைகளும் இடம்பெறும். மேலும், வசந்தம், ஒலி 96.8 கலைஞர்கள் படைக்கும் ஆடல், பாடல் நிறைந்த கலை நிகழ்ச்சி களும் உண்டு. வேட்டை 4', 'யாதுமாகி', நாடகங்களில் நடிக்கும் கலைஞர் களையும் நேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் உண்டு.
ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் சாலைக்காட்சி
1 mins read

