தமிழ் இலக்கியத்தில் புதிய எண்ணங்கள்

2 mins read
446849ad-833e-4856-bda7-d737362d852e
-

மாறி வரும் சிங்கப்பூர் படைப்பு களைக் குறித்து தேசிய கலைகள் மன்றத்தில் சென்ற ஞாயிறு மாலை ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. 1950களிலிருந்து இருந்து வந்த மரபு சார்ந்த இலக்கியங்களுக்கு மாறாக நவீன இலக்கியங்களை நோக்கி சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பயணம் செய்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் உலகமய மாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாடுகளில் இருந்து மென் பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் சிங்கப்பூருக்குக் குடியேறியது.

நவீனம் என்பது மொழியிலும் இலக்கியம் எழுதப் படும் முறையிலும் உள்ளது என்று கூறி உரையாடலைத் தொடங்கிய திருமதி சித்ரா ரமேஷ், "உலகமே ஒரு சிறு கிராமமாகச் சுருங்கி விட்ட நிலையில் ஒரு எழுத்தாளன் தன் இலக்கிய எல்லையை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் குறுக் கிக்கொள்ள வேண்டுமா அல்லது பொதுத்தன்மையோடு உலக இலக்கியம் படைக்க வேண்டுமா?" போன்ற கேள்விகளை எழுப்பினார். சிங்கப்பூரில் தற்காலக் கவிதை களின் போக்கில் மரபு, புதுமை, நவீனத்துவம் என்று எல்லாக் கூறுகளும் தென்பட்டாலும், வடி வம், பாடுபொருள், மொழிநடை யில் பல நவீன உத்திகள் வெளிப் படுகின்றன. பல கோணங்களிலும் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. வாசகர்களுடனான உரையாடல் வெளி விரிவடைந்துள்ளது. தாய்மண்ணின் மணத்தோடு பதி யனிடப்பட்ட செடிகளின் வளர்ச்சி யோடு கவிதைகளும் மேம்பட்டு வருகின்றன என்று கூறினார் தற்கால சிங்கப்பூர் கவிதைகள் பற்றிப் பேசிய திரு மகேஷ்குமார்.

திருமதி சித்ரா ரமேஷ் (நடுவில்), (இடமிருந்து) மகேஷ்குமார், எம் கே குமார், ஷா நவாஸ், சிவானந்தம் நீலகண்டன் ஆகியோர். படம்: தி ஆர்ட்ஸ் ஹவுஸ்

முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg