பத்து முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் பயிலரங்கு ஒன்றை மீடியாகார்ப்பின் 'ஒலி 96.8 எஃப் எம்' நிறுவனம் நடத்தியுள்ளது. 'ஒலி இளைய படைப்பாளர் பட்டறை' எனும் அதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இம்மாதம் 14, 15 தேதிகளில் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது. செய்தி வாசிப்பது, விளம்பரங் களைத் தயாரிப்பது, ஒலி படைப்பாளர்கள், வசந்தம் கலை ஞர்கள் ஆகியோரின் பொறுப்பு களைப் புரிந்துகொள்வது போன் றவற்றை மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.
ஒலி வானொலி படைப்பாளர் கள், சிறப்பு பேச்சாளர்கள் மாணவர்களிடையே தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். வசந்தம் கலைஞர்களான பாரதி, இளமாறன் ஆகியோர் தங்களது கலைப் பயணம் பற்றி பகிர்ந்து கொண்டனர். இந்திய மாணவர்கள் பல் வேறு திறன்களுடன் முழுமை யான வளார்ச்சி காண சிண்டா கொண்டுள்ள திட்டங்கள் பற்றி யும் இந்த நிகழ்ச்சியில் விளக்கப் பட்டது. தங்களது திறன்களை வெளிக்காட்டவும் மாணவர் களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
மாணவர்களிடையே தமது கலைப் பயணம் பற்றி 'வசந்தம்' கலைஞர் பாரதி பகிர்ந்துகொண்டார். படம்: மீடியாகார்ப்

