'ஸ்டீவ் ஜாப்' வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம் U$174,000க்கு விலை போனது

'ஸ்டீவ் ஜாப்' வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம் U$174,000க்கு விலை போனது

1 mins read
0499b666-4857-4f4b-bb87-e358ed7e641e
-

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வேலையில் சேர்வதற்காக பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் 1,74,000 டாலர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஏலத்திற்கு முன் கணிக்கப்பட்டதைவிட மும் மடங்கு அதிகம் ஆகும். அமெரிக்காவில் உள்ள பாஸ் டன் நகரில் இயங்கி வரும் ஆர்.ஆர். ஏல நிறுவனம் சார் பில் நடத்தப்பட்ட ஏலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த இணையத் தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த வேலை விண்ணப்பத்தை வாங்கியுள்ளார்.

அதை வாங்கியவர் பற்றி விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. தனது 18 வயதில் வேலை தேடி அலைந்தபோது பூர்த்தி செய்த ஒற்றைப் பக்க விண்ணப்ப படிவத்தில் ஸ்டீவ் எழுத்துப் பிழைகளுடனேயே பூர்த்தி செய் திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இத்துடன் தொழில் நுட்பப் பிரிவில் இருக்கும் தன் ஆர்வத்தையும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீவ் பூர்த்தி செய்த விண் ணப்பம் எந்தப் பணியில் சேர்வதற்கானது மற்றும் அவருக்கு அந்த வேலை உண்மையில் வழங் கப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை.