மின்னணு பரிவர்த்தனையை தவிர்க்கும் இந்திய இணைய பாதுகாப்புத் தலைவர்

மின்னணு பரிவர்த்தனையை தவிர்க்கும் இந்திய இணைய பாதுகாப்புத் தலைவர்

1 mins read
c331bab0-3c45-435d-b1a0-1b52d7df217e
-

புதுடெல்லி: இந்திய அரசாங்கம் மின்னணுப் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க முயற்சிகள் மேற் கொண்டு வரும் நிலையில், அந் நாட்டின் இணையப் பாதுகாப்புத் தலைவரான குல்ஷன் ராய் அதை தவிர்த்து வருவதாகக் கூறியுள் ளார். மின்னணுப் பரிவர்த்தனைக ளில் உள்ள ஆபத்துகள் பற்றி தனக்குத் தெரியும் என்பதால்தான் நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கி பரிவர்த்தனை களைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவதாக அவர் கூறியுள்ளார். நுகர்வோர் °விவகார அமைச் சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஏற் பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன் றில் அவர் இவ்வாறு பேசினார்.

இணைய வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அனைவரும் அதில் உள்ள ஆபத்துகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்றும் அவர் சொன்னார். "மின்னணு வர்த்தகச் சந்தை களை யார் நிர்வகிப்பது? என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, இதில் உள்ள நுகர்வோர் குறை களை நாம் எப்படி எதிர்கொள் கிறோம்? என்ற கேள்வியும் எழுகிறது. "ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம், கடன் அட்டை (கிரெடிட் கார்டு) தொடர்பிலான மோசடிகள் மிக வும் சிக்கலானவை. அதற்கு தீர்வு காண்பது என்பதும் சற்று கடினமான ஒன்று," எனக் கூறினார்.