'ஜீ' தொலைக்காட்சியில் சிறுவர் பாட்டுத்திறன்

'ஜீ' தொலைக்காட்சியில் சிறுவர் பாட்டுத்திறன்

1 mins read
aaa263c5-3f3a-4533-a719-8bf7c1780823
-

போட்டிக்கான தகுதிச்சுற்று தமிழகத்தில் புகழ்பெற்ற 'ஜீ' தமிழ்த் தொலைக்காட்சி நிறு வனத்தின் சிறார்களுக்கான மாபெரும் பாட்டுத்திறன் போட்டி யில் பங்கேற்க விருப்பமா? அதற்கான தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள தமிழ்நாட்டுக்குச் செல்ல முடியாத நிலையா? கவலை வேண்டாம். முதன் முறையாக சிங்கப்பூர் வருகிறது 'ஜீ தமிழ்ச் ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ்' பாட்டுத் திறன் போட்டிக்கான தகுதிச் சுற்று!

ஐந்து முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கான இந்த பாட்டுப் போட்டியின் இரண்டாம் பருவம் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடை பெறவிருக்கிறது. அதற்கான தகுதிச் சுற்று முதன் முறையாக சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை எக்ஸ்போ கண்காட்சி மண்டபம் 4Bயில் தமிழ் முரசு நடத்தும் இந்திய விற்பனைத் திருவிழாவில் மாலை 5 மணி முதல் இந்தத் தகுதிச் சுற்று நடைபெறும்.

அதில் சிறப்பு நடுவராகக் கலந்துகொள்ள 'ஜீ' தமிழ்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா (படம்) சிங்கப்பூர் வருகிறார்.