தமிழ்மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் இந்தியர் சங்கம் படைக்கும் கவிமணம் 2018- =கவிதைத் திறன் போட்டிக்கான குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "எனது வாழ்க்கைப் பயணத் தில் இணைந்து எண்ணற்ற இன்ப நினைவுகளை ஏற்படுத்திச் சென்ற அந்த அவள்..... பூமலையில், கடற்கரையில், பொதுவிடங்களில் எனது கையோடு கைகோத்து உலாவி, காதல் மொழி பேசிக் கனியிதழ்ச் சுவைதந்து காலமெல்லாம் உங் கள் காலடியில் கவிழ்ந்து கிடப் பேன் என்று கதிர்மேல், மதில்மேல் ஆணையிட்டுக் கூறிய அந்த அவள்...."
மேற்கொண்ட வரிகளை உடைய நூல் எழுத்தாளர் பாத் தேறல் இளமாறனின் 'மண்மணச் சிறு கதைகள்' எனும் நூலில் காணப்படும். இந்நூலில் இருக் கும் 'அந்த அவள்' சிறுகதையின் குறிப்புகளை மனதிற்கொண்டு, உங்கள் கற்பனையுடன் கவிதை ஒன்றை வரையவும். தேசிய நூலக வாரியத்தின் நூலகங் களில் இந்நூல் கிடைக்கும். ஆனால் கவிதையில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கதை யின் குறிப்பு மற்றும் நூலில் வரும் வரிகளைப் பயன்படுத்தக் கூடாது. கூடாது.
உங்கள் கவிதையைக் கருத்து, மொழிநடை, ஓசை யொழுங்கு, வெளிப்பாட்டு உத்தி ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு வடிக்க வேண்டும். மேலும் கவிதை 12 வரி களுக்கு குறையாமலும் 20 வரி களுக்கு மிகாமலும் அமைதல் வேண்டும். போட்டியில் பங்கேற் போர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
உங்கள் கவிதையைத் தமி ழில் kavimanam@sg=ia.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். கவிதைப் பக்கங்களில் வேறெந்த விவரங்களும் எழுதக் கூடாது. தங்கள் பெயர், அடை யாள/அனுமதி அட்டை எண், தொலைபேசி எண் ஆகிய விவ ரங்களை மின்னஞ்சலில் வேறொரு பக்கத்தில் தர வேண் டும். கவிதைகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் ஏப்ரல் 16, 2018.
தேர்ந்தெடுக்கப்படும் கவி தைகள் ஏப்ரல் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் நடை பெறும் இறுதிப் போட்டியில் படைக்கப்படும். அப்போது நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த ஐந்து கவிதைகளுக்கு ரொக்கப் பரிசாக முறையே $1000, $700, $500, $300, $200 என வழங் கப்படும்.

