'விழித்திருக்கும் நினைவலைகள்' நூல் வெளியீடு

'விழித்திருக்கும் நினைவலைகள்' நூல் வெளியீடு

1 mins read
1df98c37-502e-4d72-99b2-85ee8e93b2dd
-

முத்துவிழாக் காணவுள்ள ஆசிரியர் திரு.செ.பாலசுப்பிரமணி யன் அவர்கள் எழுதிய "விழித் திருக்கும் நினைவுகள்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 16வது மாடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய நூலக வாரியம் மற்றும் கவிமாலை காப் பாளர் மா.அன்பழகன் மற்றும் ஆசிரியரின் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் நூலாய்வு செய்த இரத்தின வேங்கடேசன், முனைவர் கோ.விஜயராணி, திரு.பொ.சந்தி ரன் மற்றும் நூலாசிரியரின் மாண வர் து.அழகியபாண்டியன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்க ஆசிரி யர் ஏற்புரையாற்றினார்.

'விழித்திருக்கும் நினைவலைகள்' நூலை தமிழறிஞர் சுப.திண்ணப்பன் வெளியிடத் தமிழாசிரியர் சங்கத் தலைவர் எஸ்.சாமிக்கண்ணு (இடக்கோடி) பெற்றுக்கொண்டார். அருகில் நூலாசிரியர் செ.பாலசுப்பிரமணியன் (வலமிருந்து 2வது), அவரது மகள் கலாராணி ஆகியோர் உள்ளனர். படம்: தியாக இரமேஷ்