மருத்துவர் ராகவ் சுந்தர்,
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையம்
"புற்றுநோய்க்கு எதிரான போராட் டம் போருக்குச் செல்வதைப் போன்றது - நீங்கள் உயிருடன் திரும்பி வருவீர்களா என்பது தெரியாது, ஆனால் எதிரியை அழிப்பதற்கு எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்வீர் கள்," என்றார் பெருங்குடல் புற்று நோயிலிருந்து உயிர் பிழைத்திருக் கும் திரு எம். இவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையத்தில் (NCIS) சிகிச்சை பெற்றார்.
திரு. எம் முதன்முதலில் மலத் தில் இரத்தத்தைப் பார்த்த போது, விளைவு என்னவாக இருக்குமோ எனத் தெரியாததால் மருத்துவரிடம் செல்ல பயந்தார்.
சில வாரங்களுக்குப் பிறகுதான் அவர் துணிந்து மருத்துவரிடம் சென்றார். பரிசோதனைகள் முடிந்த பிறகு அவருக்கு முற்றிய நிலையிலான பெருங்குடல் புற்று நோய் இருப்பதாகத் தெரியப்படுத் தப்பட்டது.
நல்ல வேளையாக, அவரது நிலைமை சிகிச்சை அளிக்கப்படக் கூடியதாக இருந்தது. ஆயினும் அவர் கண்டிப்பாகக் குணமடைவார் என்பதற்கு உத்தரவாதமில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி அவருக்குக் கீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகிய வற்றுடன் சிகிச்சை அளிக்கப்பட் டது.
"புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நான் உயிர் பிழைத்திருப்பது என் அதிர்ஷ்டம்," என்றார் திரு எம். "இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது, மருத்துவரிடம் முன்கூட்டியே சென்றிருக்கக் கூடாதா எனத் தோன்றுகிறது. "பரிந்துரைக்கப்பட்ட பரிசோ தனைக்கு நான் சென்றிருந்தால் இன்னும் நல்லதாக இருந்திருக்கும். புற்றுநோய்க் கட்டியை ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவர்கள் கண்டறிய வாய்ப்புக் கிடைத்திருக் கும்," என்றார் அவர்.
சிங்கப்பூரில் ஆக அதிக மானோரைப் பாதிக்கும் புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத் தட்ட 2,000 சிங்கப்பூர்வாழ் மக்களுக்குப் பெருங்குடல் புற்று நோய் இருப்பதாகக் கண்டறியப் படுகிறது.

