இந்திய விற்பனைத் திருவிழா நாளை தொடங்குகிறது

இந்திய விற்பனைத் திருவிழா நாளை தொடங்குகிறது

3 mins read
bbac946a-c2d4-4c9f-8077-4c4686ba2660
-

ப. பாலசுப்பிரமணியம்

அபிஷேக், அர்ஜுன் கபூர், ரன்பீர் கபூர் ஆகிய 'பாலிவுட்' பிரபலங்களை வெள்ளித்திரையில் பார்த்து ரசித்தவர்களுக்கு அவர் களை நேரில் காண அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி, நட்சத்திர பாலிவுட், சின்னத்திரை நடிகர்கள் அடங்கிய காற்பந்துக் குழு சிங்கப்பூருக்கு வரவிருக்கிறது. ஜாலான் புசார் அரங்கில், இந்த நட்சத்திர குழு சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து விளையாட் டாளர்கள், உள்ளூர்ப் பிரபலங்களை உள்ளடக்கிய சிங்கப்பூர் காற்பந்து குழுவுடன் பொருதவிருக்கின்றது. சிங்கப்பூரைச் சார்ந்த குழுவில் ரஃபி அலி, எஸ்.சுப்ரமணி, லிம் டொங் ஹாய், லையனல் லுவிஸ் ஆகிய முன்னாள் காற்பந்து நட்சத்திரங்களுடன் உள்ளூர் பிரபலங்கள் தேவராஜன், இள மாறன், எபி சங்கரா போன்றவர்கள் இடம்பெறுவர்.

வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை எக்ஸ்போ கண்காட்சி மண்டபத்தில் தமிழ் முரசு நடத்தும் இந்திய விற்பனைத் திருவிழாவுக்கு வருவோர் இந்த ஆட்டத்திற்கு சிறப்பு சலுகையைப் பெறலாம். அங்கு $50 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் செலவிடும் வாடிக்கையாளர்கள் இந்த ஆட்டத் தின் 'ஏ','பி' பிரிவு டிக்கெட்டுகளை வாங்கினால் வாங்கும் ஒரு டிக் கெட்டுக்கு இன்னொரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும். 'மேஜிக் பஸ்' கிண்ணம் என அழைக்கப்படும் இந்த நட்சத்திர காற்பந்து விளையாட்டு போட்டிக்கு ஒரு பின்னணி உள்ளது. 'மெஜிக் பஸ்' திட்டம் இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் வறுமையில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும் உதவிக் கரம் நீட்டி வருகிறது. 12 வயதில் திட்டத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு முக்கிய வாழ்க்கை திறன்கள் கற்பிக்கப்படுகின்றன.

15 வயதில் பிரச்சினைகளை தீர்ப்பது, வர்த்தக அளவிலான உரையாடல், குழு உணர்வு போன்ற வேலைக்கு தேவையானத் திறன்களை இவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர். 18 வயதில், கணினி திறன், ஆங்கில பேச்சு திறன் போன்ற முக்கிய திறன்களை பெற்று வேலையில் சேர்ந்து வறுமை நிலையிலிருந்து விடுபடுகின்றனர். இத்திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் திடலில் களமிறங்குகின்றனர் இந்த நடிப்புத் துறை பிரபலங்கள். நாளை தொடங்கும் இந்திய விற்பனைத் திருவிழாவில் அனைத்து வயதினருக்கும் உகந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

மார்ச் 30ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று 'ஜீ' தொலைக்காட்சி நடத்தும் 'ச ரி க ம ப' சிறுவர் பாட்டுத் திறன் போட்டிக்கான தகுதிச் சுற்று நடை பெறும். வண்ண ஆடைகள், அணிக லன்கள், உணவு, கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை பெரியவர் பார்த்து வாங்கும் அதே நேரத்தில் சிறார் கள் விளையாடுவதற்கான சிறப்பு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அறுசுவை உணவையும் மக்கள் வாங்கி உண்டு ரசிக்கலாம். மார்ச் 29 முதல் ஏப்ரல் ஒன்று வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. குடும்பத்துடன் வந்து குதூகல மாக நேரத்தைக் கழிக்க வாருங் கள். ஏப்ரல் 22ஆம் தேதி, பிற்பகல் 12.30 மணிக்கு ஜாலான் புசார் அரங்கில் நடைபெறும் நட்சத்திர காற்பந்து ஆட்டத்தைக் காண விரும்புவோர், https:/showtickets.asia/ எனும் இணையப் பக்கத் திற்குச் சென்று டிக்கெட் விவரங் களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் தங்கள் காற்பந்துத் திறன்களைக் காட்ட வரும் பாலிவுட் நட்சத்திரப் பட்டாளம். படம்: ஈஃபேஸ் சொல்யூஷன்ஸ்