சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா

1 mins read

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் முத்தமிழ் விழாவை இவ்வாண்டும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. இம்மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் முத்தமிழ் விழா நடைபெறுகிறது. கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற் பாட்டில் வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெறும். கல்வி; சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறந்த சிறுகதை எழுத்தாளரும் ஆவணப்படத் தயாரிப்பாளரும் திரைப் பட இயக்குநரும் சிறந்த பேச்சாள ருமான திரு பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றுவார். இவ்வாண்டும் வழக்கம்போல் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழவேள் விருது வழங்கி சிறப்பிக் கப்படும். அத்துடன் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பும் இடம்பெறும். மேலும் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனுமதி இலவசம்.