தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழ கம், கியட் ஹோங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு வுடன் இணைந்து நடத் திய பட்டி மன்றம் சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத்திற்கு எதிரே அமைந் துள்ள கியட் ஹோங் சமூக மன்றத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்தப் பட்டிமன்றத்தின் நடுவ ராக பேராசிரியர் எம். இராமச் சந்திரன் செயல்பட்டார். தமிழ்நாட்டி லிருந்து வந்திருந்த திரு கே சிவ குமார், திரு மோகனசுந்தரம், செல்வி தெய்வானை, செல்வி அனுகிரஹா ஆகியோருடன் திரு ஜோதி மாணிக்கவாசகம், புலவர் மு. சந்திரசேகர் ஆகி யோரும் பேசினர்.
"உதவி செய்வதில் ஆபத்தும் இருக்கிறது ஆனந்தமும் இருக் கிறது," என்ற இரு தரப்பு விவாதங் களும் முடிந்தபிறகு நடுவரின் தீர்ப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பேராசிரியர் எம் இராமச்சந்திர னின் தீர்ப்பு அனைவரையும் கவர்ந்தது. "ஆபத்து ஆனந்தம் என்பது உடல் ரீதியாகவா, உணர்வு ரீதி யாகவா என்பது முக்கியம். உடல் ரீதியாக பிறருக்கு உதவி செய்வ தில் ஆபத்தும் இருக்கலாம் ஆனந்தமும் இருக்கலாம். ஆனால் உணர்வு ரீதியாக பிறருக்கு உதவி செய்வதில் இரண்டும் சேர்ந்து இருக்க முடியாது.
பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவர் பேராசிரியர் எம். இராமச்சந்திரன், திரு மோகனசுந்தரம், செல்வி தெய்வானை, செல்வி அனுகிரஹா, திரு ஜோதி மாணிக்கவாசகம், புலவர் மு. சந்திரசேகர் ஆகியோர் அமர்ந்திருக்க திரு கே சிவகுமார் உரையாற்றுகிறார். செய்தி: ரஜித்; படம்: நாதன் வீடியா

