ரவீணா சிவகுருநாதன்
இன்றைய அவசர யுகத்தில் பலர் பழங்களின் பலன்களை முழுமை யாக அறிவதுமில்லை, போதிய அளவில் அவற்றை உண்ணுவதும் இல்லை. பழங்களில் மிகக் குறைந்த அளவு கொழுப்புச்சத் தும் அதிக அளவு நார்ச்சத்தும் இருக்கின்றன. பழங்களைச் சமைக்காமல் அப்படியே உண்பதால் பழங்களி லுள்ள எல்லா சத்துகளும் உடலுக்கு முழுமையாகக் கிடைக் கின்றன. பழங்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மாம்பழம், வாழைப்பழம், பலாப் பழம், அத்திப்பழம், சீத்தாப்பழம், நெல்லிக்காய், இலந்தைப்பழம் உள்ளிட்ட பத்து முக்கிய பழங் களின் மருத்துவ குணங்களைப் பாடல்களின் மூலம் மக்களுக்கு எடுத்துக்கூறிய லிஷா பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்த 'பழங்களே மருந்து' நிகழ்ச்சி. தமிழ்மொழி மாதத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடந்தது. வித்தியாசமான முறையில் திரைப்பாடல்கள் மூலம் பழங் களின் மகத்துவத்தை அறிந்து கொள்ள முடிந்தது. பிரபல பாடல் வரிகள் பழங்களின் மருத்துவ பலன்களைக் கூறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.
கிராமத்துப் பாட்டிபோல வேட மிட்ட ஒருவர் தனது பேரனிடம் பழங்களில் உள்ள மருத்துவ குணங்களை விளக்கிக் கூறுவது போல அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. பாட்டியாக வேட மிட்டவர் லிஷா பெண்கள் பிரிவு உறுப்பினர் வதிஜா ஹமிட். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தின ராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு வின் தலைவருமான விக்ரம் நாயர் வருகை தந்திருந்தார்.
முதன்முறையாக இயல், இசை, நாடகம் மூலம் பழங்களின் பயன் களைத் தெரிந்துகொள்ள முடிந்தது என அவர் கூறினார். பழங்களைப் பற்றி அறியும் ஆர்வத்தை அது தூண்டியுள்ளது என்று அவர் சொன்னார். லிஷா பெண்கள் பிரிவு தலைவி திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி, "தமிழ் மொழி மாதத்தில் சற்று வித்தியாசமான நிகழ்ச்சியைப் படைக்க வேண்டும் என்ற எண்ணமே, பல மாதங்களின் தயாரிப்பிற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியாக உருவெடுத் துள்ளது," என்று குறிப்பிட்டார்.
மேலும், இது ஒரு மாறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் வருகை தந்த பலருக்கும் பயன் உள்ள வகையிலும் இருக்கும் என்று திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி கூறினார். சுமார் 200 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை உற்சாகத்துடன் வழி நடத்தினார் திரு சரவணன் அய்யாவு. நிகழ்ச்சியின் இறுதியில் ருசிப் பதற்கு பத்து வகையான பழங்கள் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டன. இது நாவிற்கும் விருந்தாக அமைந்தது.

