♦ சொல், சொல்லாத சொல்- புதிர்ப்போட்டியின் நிறைவுச்சுற்று நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடக்க உள்ளது. இளமைத்தமிழ்.காம் நடத்தும் இப்போட்டியை படைப் பாளர் ஜிடி மணி வழிநடத்துகிறார். 'சொல்வளக் கையேடு' நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ♦ வாங்க தமிழில் பேசலாம் நிகழ்ச்சி, நாளை பிற்பகல் 2 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் நடை பெறும். சிங்கைத் தமிழ் சங்கமும் வளர்தமிழ் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, மாணவர்கள் ஆங்கிலம் தவிர்த்து, தமிழில் சரளமாகப் பேசிப் பழக வேண்டும் என்ற நோக்கத்துடன் படைக்கப்படுகிறது.
தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள்
1 mins read