சிங்கப்பூரிலுள்ள 19 இந்திய முஸ் லிம் அமைப்புகளின் சார்பில் இந் திய முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்த 'இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்' எனும் தலைப்பி லான நிகழ்ச்சியில் மலாய் மொழி மாணவர் காலித் சுபாண்டி ஆங்கி லம் கலந்த கொஞ்சு தமிழில் பேசி யதோடு திருக்குறள்கள், அவற் றின் விளக்கங்களையும் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
முனைவர் சுப திண்ணப்பனிடம் தமிழ் படித்ததால் தமிழ்மொழி மீதான ஆர்வம் அதிகரித்தது என்று அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் திருவாட்டி டெனிஸ் புவா தமிழ்மொழி விழாவின் நோக்கம் பற்றி சிறப்புரையாற்றினார். 'தமிழர்களே உங்களுக்குத் தெரியுமா' என்ற நிகழ்ச்சியை திருவாட்டி சித்ரா மெய்யப்பனின் தயாரிப்பில் 17 தொடக்கப்பள்ளி மாணவர்கள் படைத்தனர். செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி மாணவி அருணா கந்தசாமி 'தமிழர்களும் தன்னம் பிக்கையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
எழுத்தாளரும் பேச்சாளருமான ஆளூர் ஷா நவாஸ் 'இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்' என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரையில், "அறம் சார்ந்த கல்வியை இக்காலக் கல்விமுறை தர வில்லை," என்றார். "தாய்மொழியையும் சுய வர லாற்றையும் தெரிந்துகொள்ளாத சமூகம் நாளடைவில் பெருமை இழக்கும் என்றார் அவர்.
சிறப்புப் பேச்சாளர் ஆளூர் ஷா நவாஸுக்கு ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா நினைவுப் பரிசு வழங்கினார். உடன் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் கவுஸ் (வலக்கோடி), விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் 'புதிய நிலா' ஜஹாங்கீர் (இடக்கோடி) கடையநல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் நசீர் கனி. செய்தி: ஜகுர் ஹுசேன்; படம்: இந்திய முஸ்லிம் பேரவை

