தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முகப்பருக்களுக்குத் தீர்வு

2 mins read
30c8b8ab-0ad8-428e-a2bd-a56e0cdaff4a
-

தூசிகள், பாக்டீரியா, இறந்த செல் களின் கலவையானது சரும எண் ணெய்ச் சுரப்பிகளில் தங்கி புரப்பி யோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்வதால் பருக்கள் வெளிப்படு கின்றன. மேலும், எண்ணெய்ப் பசை அதிகம் கொண்ட சருமங்கள் கூட முகப்பருக்களை உண்டாக்கும் தன்மை கொண்டவை. இத்தகைய பருக்கள் முகத்தில் தோன்றினால் அவை முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதே போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும் ஒருசில இயற்கைப் பொருட்கள், செயல்கள் மூலம் முகத்தில் ஏற் படும் பருக்களைக் குறைக்கலாம்.

பதின்ம வயதில் பலருக்கும் ஏற்படும் பிரச்சினை இது. சில நாட்கள் தோன்றி மறைந்துவிடும் பரு எனில் பரவாயில்லை. ஆனால் சிலருக்குப் பரு எரிச்சலையும் முகத்தை விட்டு நீண்டகாலம் நீங் காமலும் தொல்லை தரும். அவர் களுக்கான எளிய தீர்வுகள்: முகத்தை எப்போதும் சுத்தமாக, அழுக்கின்றி வைத்துக்கொள் ளுங்கள். ஒருபோதும் முகத்தில் வந்துள்ள பருக்களைக் கிள்ளா தீர்கள். கூடுமானவரை செயற்கை ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்று தெரிந்தும் அதனைப் பயன் படுத்தினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படுவது நிச்சயம்.

ஜாதிக்காய், வசம்பு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்து அதில் பன்னீர் கலந்து பருவின் மீது தடவி வந்தால் பரு அமுங்கிவிடும். முகத்தில் பருக் களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால் அதற்கான தடமும் மறைந்துவிடும். ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தினால் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் உடனே ஒருமுறை முகத்தைக் கழுவித் துடைத்துவிடுங்கள்.