வனிதா மணியரசு
பாவேந்தர் பாரதிதாசன் பாடல் களை ஆராயும் வண்ணம் நடந் தேறியது 'பாவேந்தர் 128 சுழலும் சொற்போர்'. இம்மாதம் 21ஆம் தேதி காலையில் தேசிய நூலக வாரியத்தில் நிகழ்ந்த விழாவில் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வின் தொடக்கமாக பாவேந்தர் நூல் வெளியீடு இடம் பெற்றது. திரு போப் ராஜு நூலை வெளியிட திரு கலைச்செல்வன் நூலைப் பெற்றுக்கொண்டார். கவிஞர் இறை மதியழகன் அறி முகவுரை வழங்கினார்.
பாவேந்தர் பாடல்களில் கூறப் பட்டுள்ள கருத்துகளை அடிப்படையாக வைத்து சுழலும் சொற்போர் அங்கம் நடைபெற்றது. கனகசபை சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டவர், பாரதியின் மேல் உள்ள காதலாலும் மதிப்பாலும் தன்னை பாரதிதாசன் என்று பெயரிட்டுக் கொண்டார். பாவேந்தர் தம் பாடல்களில் அதிகம் போதித்தது சமூக அவ லம் பற்றிய, மொழி உணர்வா அல் லது பெண்ணுரிமையா என்ற தலைப்பை ஒட்டி பேச்சாளர்கள் பேசினர்.
சமூக அவலம் பற்றி பேசிய திரு கண்ணன் சேஷாத்திரி, பாவேந்தர் அதிகம் சமூக சிந்தனை உடையவர் என்றார். சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அன்றைய தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளையும் பாவேந்தரின் பாடல்களில் அதிகம் காணமுடியும். பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் அவருடைய பகுத்தறிவுத் திறன் களைக் கொண்டு மக்களுக்காகப் பல சமுதாய தொண்டுகளில் ஈடுபட்டார். சமூக அவலங்களைப் பற்றி அவர் எழுதிய பாடல்கள் மக்களைச் சென்றடைந்து தமிழர்க ளின் வளர்ச்சிக்கு உதவியதாக திரு கண்ணன் கூறினார்.
அடுத்து மொழி உணர்வைப் பற்றி பேசிய ஆசிரியர் திருமதி உஷா, பாரதிதாசனின் தமிழ்ப் பற்று பற்றி அவரது பாடல்களின் மூலம் விளக்கினார். "தமிழ் மொழி நன்னிலை அடைந்தால் தான் தமிழனின் வாழ்க்கையும் நன்னிலை அடையும் என்ற அவருடைய எண்ணம் அவருடைய பாடல்களில் தெளிவாகத் தெரிகிறது. பாரதிதாசன் கவிதைகளில் இன்று மட்டுமல்ல என்றென்றும் வீற்றிருப்பது தமிழ் உணர்வுதான்," என்று திருமதி உஷா உறுதியாகக் கூறினார்.
இடமிருந்து ஆசிரியர் திருமதி உஷா, கண்ணன் சேஷாத்திரி, முனைவர் கடவூர் மணி மாறன், முனைவர் ரெத்தின வெங்கடேசன், திரு ராம்குமார் சந்தானம். படம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கிய களம்
இறுதியாக பெண்ணுரிமையை வாதிட வந்தார் திரு ராம்குமார் சந்தானம். ஒரு ஆண்மகனாக தாம் பெண்ணுரிமையைப் பற்றி பேச பாரதிதாசனின் கவிதைகள் தூண்டியதாக அவர் தெரிவித் தார். பாரதியுடன் நெருக்கமாகப் பழகிய பாரதிதாசன், பாரதியைப் போல் பெண்கள் இடத்தில் அதிக மதிப்பும் வியப்பும் கொண்டவர் ஆவார். ஓர் அழகுப் பதுமையாக மட்டுமில்லாமல் அவளின் பல பரி மாணங்கள் பற்றியும் எழுதியவர் பாரதிதாசன். சமூக அவலம் மொழி உணர்வு இவை இரண்டை யும் பார்த்து புரிந்துகொள்ளலாம். ஆனால் பெண்ணுரிமையை உணர்ந்தால் மட்டுமே பாரதிதாசன் போல் பாட முடியும் என்றார் திரு ராம்குமார். பேச்சாளர்களின் கருத் துகளை ஒருமித்து விவாதத்தை வழிநடத்த நடுவர்களாக டாக்டர் திரு கடவூர் மணிமாறன் மற்றும் டாக்டர் திரு ரெத்தின வெங்கடே சன் உதவினர். விவாதத்தின் இரண்டாம் அங்கமாக பேச்சாளர் களிடையே கேள்வி பதில் சுற்றும் இடம்பெற்றது. அதன் பின்னர் டாக்டர் கடவூர் மணிமாறன் சிறப்புரை ஆற்றினார்.
"பாரதிதாசன் தொட்டு துலங்காத தலைப்புகளோ கருத்துகளோ இல்லை என்றும் அவற்றில் ஏற்றமாய் சொல்லப்பட்டிருப்பவை சமூக அவலம், மொழி உணர்வு மற்றும் பெண்ணுரிமை," என்றார் அவர். பாரதிதாசன் எழுதிய பாடல்கள் எண்ணிலடங்கா, அதன் மூலம் அவர் மக்களுக்கு பல நல்ல நிறைவான பாடங்களைக் கற்பித்துள்ளார். தனக்குப் பிடித்த பாரதிதாசன் பாடல்களைப் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.
நிறைவாக தமிழ்த் தொண்டை அங்கீகரிக்கும் வண்ணமாக பாவேந்தர் 128 விருது திரு மு ஜஹாங்கீருக்கு வழங்கப்பட்டது. பாரதிதாசன் கவிதைகளில் புதைந்திருக்கும் வாழ்க்கை அறங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று தெரிவித்தார் ஏற்பாட் டாளர் டாக்டர் திரு ரெத்தின வெங்கடேசன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ் ஆசிரியர் திரு அ ஜாகிர் உசேன் (41) தமிழகத்தில் அவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியரைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி உற்றார். டாக்டர் திரு கடவூர் மணிமாறனிடம் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கற்ற இவர், மீண்டும் தமிழால் தாங்கள் இணைந்ததைக் கருதி பெருமை கொண்டார்.

