உலகத் தமிழ்ச் சங்கம்: ரூ.50 கோடியில் அருங்காட்சியகம், ஐந்திணைப் பூங்கா

2 mins read
7953c2e5-55c7-4ea2-9ca4-b7180bcf56ec
-

மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உலகத் தமிழ்ச் சங்கத்துக்கென ரூ.100 கோடியை ஒதுக்கினார். அதில் ரூ.25 கோடி யில் உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு என பிரம்மாண்ட கட்டடம் கட்டப் படும் என அறிவித்தார். அதன்படி மதுரை அரசு சட்டக் கல்லூரி அருகே 14.15 ஏக்கரில் அமைந்த இச்சங்கக் கட்டடம் 2016ல் ஜெயலலிதாவால் திறக்கப் பட்டது. சுமார் 1 லட்சம் சதுரடியை கெண்ட இக்கட்டடம் பல்வேறு வசதிகளுடன் செயல்படுகிறது. இதில் ரூ.50 கோடியில் அருங் காட்சியகம் உள்ளிட்ட மேம்பாடு கள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதற்கட்டமாக ரூ.15 கோடி யில் பூர்வாங்கப் பணிகள் தொடங் கப்பட்டன. இதற்கான பணிகள் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (பூம்புகார்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஐந்திணைப் பூங்கா, அருங்காட்சி யகம் அமையவிருக்கும் இடங் களை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் கூறு கையில், "உலகத் தமிழ்ச் சங்கத் தின் நுழைவாயிலைப் பார்த்தாலே அனைவரையும் கவரும் வகையில் நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டுக் காளை உள்ளிட்ட கலைப்பெருட் களால் அழகுபடுத்தப்படும். அருங் காட்சியகத்தில் ஓவியம், கல், மரச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பம், சுடு மண் சிற்பம், பேர்க்கருவிகள், அறிவியல், விவசாயம், மருத் துவம், மெய்நிகர் காட்சிகள், பழந் தமிழ் வாழ்வியல் பெருட்கள் சேகரிப்பு உட்பட 328 கலைப் பெருட்களை இடம்பெறச் செய்ய உள்ளோம்.

"குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களின் தன்மையை விளக்கும் வகையில், அழகிய ஐந்திணைப் பூங்கா ஒன்று அமைகிறது. ஐந்து நிலங்களின் தன்மை, செயல்பாடு எப்படி இருக் கும். இந்த நிலங்களில் வாழும் உயிரி னங்களை அருகில் சென்று பார்க் கவும் இயற்கையை இசை நயத் துடன் ரசிக்கவும் 12டி கேணத்தில் பார்க்க பிரம்மாண்ட திரையரங்கம் ஒன்றும் அமைக்கப் படுகிறது. இரண்டு, மூன்றாண் டுகளில் இப்பணிகள் நிறைவடை யும்," என்றார் கா.மு.சேகர்.

சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம். படம்: தமிழக ஊடகம்