பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு நினைவூட்டல்

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஒரு நினைவூட்டல்

2 mins read
88f54b0c-acde-4c92-ab02-244d6cf56957
-
Google News Preferred Icon

வைதேகி ஆறுமுகம்

சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தினத்தன்று நாட்டை அழிக்க ஆறு பயங்கரவாதிகள் போடும் திட்டத்தைப் பற்றிய கதை ஒன்றை செய்தி ஆசிரியர் திரு ஆண்ட்ரே இயோ, வயது 46, இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டார். '9 ஆஃப் ஆகஸ்ட்' எனும் தலைப்பைக் கொண்டுள்ள இப்புத் தகம் சென்ற ஆண்டின் 'எபிகிராம் புக்ஸ் ஃபிக்‌ஷன்' பரிசுக்குத் தேர்வுசெய்யப்பட்டது. இதுவே அவர் படைத்த முதல் நாவல். சிங்கப்பூரின் பாதுகாப்பு நிரந் தரமானது என்ற அலட்சியப் போக் கைக் கொள்ளாமல், இந்நாட்டின் குடிமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காக இக் கதையை எழுதியுள்ளார் திரு ஆண்ட்ரே இயோ.

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக் கு தல் நடத்தத் திட்ட மிடும் தீவிரவாதிகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்நாட்டு தந்தை யர்கள் எதிர்நோக்கும் சவால் களைப் பற்றியும் விளக்குவதற்கு சுவா ரசியமான கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதையை அமைத்துள் ளார் திரு இயோ. தன்னுடைய பதின்ம வயது மகளை வளர்க்கும் அதே சமயத் தில் வேலைவாய்ப்பிற்காக தவிக் கும் ஹென்ரி, ஆளில்லா வானூர் தித் தாக்குதலில் தம் குடும்பத்தை இழந்ததன் காரண மாக தீவிர வாதத்தில் ஈடுபடும் துன் எனும் ஆப்கானிஸ்தான் நாட்டு விவசாயி, பயங்கரவாதத் தாக் குதல் ஏதேனும் சிங்கப்பூரை நிலை குலையச் செய் யாமல் இருப் பதற் குக் கடினமாக உழைக்கும் உள்நாட் டுப் பாது காப்புத்துறை ஆய் வாளர் ரஹிம் என்று பயங்கரவாதத் தாக்குதல் களினால் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர் களைக் கொண்டு இக்கதை அமைக் கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகள் குற்றப் பிரிவுச் செய்தியாளராக இருந்த இயோ, கொலை, பாலியல் பலாத்காரம் ஆகிய மனிதாபிமானமற்ற செயல் களைப் பற்றிய செய்திகளை சேகரித் த துடன் மலேசியாவிலுள்ள ஜோகூர்பாருவின் சிறைச்சாலை யிலும் ஓர் இரவு தங்கியுள்ளார். இரக்கமற்ற மனிதர்கள் உள்ள இக்காலத்தில் சிங்கப்பூரர்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும் எதிர்பாராத பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆயத்தமாவது அவசியம் என்ப தைக் கருத்தில்கொண்டு இந்த கதையை உருவாக்கியதாக அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

பிள்ளைகள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவது, உணவங்காடியில் சுவை குறைந்த உணவை விற்பது போன்ற சிறு குறைகளைப் பிரச்சி னைகளாகப் பேசும் சிங்கப்பூரர்கள் பயங்கர வாதத் தாக்குதலைப் பற்றியும் அதைத் தடுப்பதற்கான வழிகளைப் பற்றி யும் உரையாடுவதற்குத் தயங்குவ தாக அவர் குறிப்பிட்டார். வேலை முடிந்து நான்கு பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளும் அதே சமயத்தில் இப்புத்தகத்தை எழுதிய திரு இயோ, "வேலை, குடும்பப் பொறுப்புகளுக்கிடையே இந்த கதையை எழுதுவது சிரமமாக இருந்தது. இருப்பினும், பயங்கர வாதத் தாக்குதலின்போது சிங்கப் பூர் மக்கள் இனம், மதம் வேறுபாடு இன்றி ஒரு சமுதாயமாக இயங்கி நம் நாட்டைக் காக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே நான் முழுமூச்சாய் இந்தப் பணியில் ஈடுபட்டேன்," என்று கூறினார்.