நூறாவது மாரத்தானை நோக்கிச் செல்லும் 59 வயது இளைஞர்

நூறாவது மாரத்தானை நோக்கிச் செல்லும் 59 வயது இளைஞர்

2 mins read
fb8e727b-9389-4395-90ea-96d169106544
-

வைதேகி ஆறுமுகம்

தமது அறுபதாவது வயதிற்குள் 100வது மாரத்தான் போட்டியை நோக்கிச் செல்ல முனைகிறார் தமிழகத்தின் திராவிட முன்னேற்­றக் கழகத்தின் (திமுக) சைதாப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிர மணி­யன், வயது 59. கடந்த நான்கு ஆண்டுகளில் பல மாரத்தான்களில் ஓடிய அவர் இம்மாதம் 29ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடந்த 'எம்.எஸ்.ஐ.ஜி. சிங்கப்பூர் ஏக்ஷன் ஆசியா 50 2018'(MSIG Singapore Action Asia 50 2018) ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். ஹிந்தெடெ வாக்கில் தொடங்கி 21 கிலோ மீட்டர் தூரம் ஓடியதன் மூலம் தனது 87ஆவது மாரத்தானை வெற்றிகரமாக முடித் தார் திரு சுப்பிரமணியன். இதுவரை 80க்கும் மேற்பட்ட மாரத்தான்களில் கலந்துகொண்ட இவர் இந்தியா புக் ஆஃப் ரெக்­கார்ட்ஸ், ஆசிய புக் ஆஃப் ரெக்­கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பிடித்த­துடன் பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

2014ஆம் ஆண்டுப் புதுச்சேரி­யில் நடைபெற்ற மாரத்தான் போட்டி­யில் முதன்முறையாக பங்கெடுத்­ததை அடுத்து இந்தி­யாவின் பல்வேறு நகரங்கள் மட்டு மல்­லாது, ஆஸ் திரே­லியா, கத்தார் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டி களிலும் அவர் கலந்துகொண்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திரு சுப்பிரமணியனுக்கு ஒரு கொள்கலன் கனரக வாக­னம் மோதிய விபத்­தில் வலது கால் மூட்டு நான்கைந்து துண்டு­களாக நொறுங்­கிய தால் தமக்கு அறு வைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் கடுமையான உடற் பயிற்சிகளில் ஈடு­­படக்கூடாது என்று ஆலோசனை கூறினர். அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலம் வீட்டில் உடற் பயிற்சிச் சிகிச்சை செய்து வந்த திரு சுப்பிரமணியன், தம்மு டைய நிலை­மையை நினைத்து மனந்தளராமல் யோகா பயிற்சி களில் ஈடுபடத் தொடங்கி, தற்போது மெதுநடை, மாரத்­தான் போட்டி­களில் பங்கேற்கும் அள­விற்கு முன்­னேறியுள்­ளார்.

தம்முடைய உடல் நலப் பிரச்­சினைகளை ஒரு தடையாக எண்­ ­ணாமல் ஆரோக்கியமான வாழ்க் கையை வாழ்ந்து வரும் திரு சுப்பிரமணியன் 1200க்கு மேற்பட் டோரு­டன் சிங்கப்பூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு தனது கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார். "வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பங்கேற்பாளர்களுக்குச் சிறப்பான முறையில் இந்த மாரத்­தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "சிறந்த பாதுகாப்புத் திட்டங் களைக் கொண்டு சிங்கப்பூரில் நடத்தப்படும் ஓட்டப் பந்தயங்களில் அடுத்தடுத்து நான் முழுமனதோடு கலந்துகொள்வேன்," என்று கூறிய திரு சுப்பிரமணியன் இத னைத் தொடந்து சண்டிகார், லக்னோ ஆகிய இடங்களில் நடை பெற­விருக்கும் போட்டிகளில் கலந்து­கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.