வாழ்க்கைச் சவால்கள் மூலம் பிறந்த நூல்

ப. பாலசுப்பிரமணியம்

பலருக்கு 21வது நூற்றாண்டின் தொடக்கம் உற்சாகத்தைத் தந்து இருந்தாலும் திருவாட்டி கோ. சித்ரா தேவிக்கு அது ஓர் எதிர் மறையான தொடக்கம். 37 வயதில் கருப்பையில் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளது என்று 2000ஆம் ஆண்டில் மருத் துவர் தெரிவிக்க, அவர் இடிந்து போனார். இருப்பினும், அன்று பள்ளிப் பருவத்தில் இருந்த இரண்டு மகன்களின் எதிர்காலத்தை எண்ணி போராடி எப்படியோ அதி லிருந்து மீண்டு வந்துவிட்டார். மகன்களை வாழ்க்கையில் நல்ல நிலைக்குக் கொண்டுவர, ஓர் ஒற்றைப் பெற்றோராக சொந்த உணவங்காடிக் கடை நடத்துதல், வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியாற்றுதல் என பல வேலை களில் ஈடுபட்டார் திருவாட்டி சித்ரா.

வாழ்க்கை சுமுகமாக சென்று கொண்டிருந்த வேளையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது மனவலிமைக்கு மீண்டும் சோதனை வந்தது. உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அவர் மேற்கொண்ட பரி சோத னையில், புற்றுநோய் அணுக்க ள் உடலில் மீண்டும் தோன்றி இருக்கும் செய்தி மனதை உடைத் தது.

வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தவர் நம்பிக்கை இழக்காது எதிர்நீச்சல் போட்டு இதற்குத் தீர்வு காண முயன்றார். சில மாதங்களுக்கு பாரம்பரிய மருத்துவ முறையையும் பின்பற்றத் தொடங்கினார்.

தேசிய நூலக வாரிய வளாகத்தில் இம்மாதம் 2ஆம் தேதி தாம் எழுதிய நூலை வெளியிட்டார் 55 வயது திருவாட்டி கோ.சித்ரா தேவி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விவரம்: epaper.tamilmurasu.com.sg

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

09 Aug 2019

சிகரம் மின் அகராதி வெளியீடு