சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகமாகத் தேர்வு செய்கிறார்கள்: சுகாதார மேம்பாட்டு வாரியம்

சுகாதார மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புது தகவல்களின்படி ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

'ஹல்தியர் டைனிங் புரோகிராம்' (ஹ்டிபி) என்ற சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் திட்டத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பானங்கள் விற்பனையாளர்கள், உணவு அங்காடிகள், காப்பி கடைகள் ஆகியோரால் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 83 மில்லியன் ஆரோக்கிய உணவு வேளைகள் விற்க்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை அத்தொகை 50 மில்லியன் மட்டுமே இருந்தது.

"சிங்கப்பூரர்களின் உணவுப் பிரியர்களின் ரசனை மாறி வருகிறது. நீரிழிவுக்கு எதிரான போரால், முழு தானிய, குறைந்த சக்கரை உள்ள உணவு தேர்வுகள் செய்வது அவசியம் என்ற விழிப்புணர்வை சிங்கப்பூரர்களிடம் தந்துள்ளது," என்றார் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சீ யொங் காங்.

தற்போது ஹ்டிபி திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 கடைகளில், 'புரோட்டா வாலா' அண்மையில் புது உறுப்பினராக சேர்ந்துள்ளது.

புரோட்டா, நாண், பிரியாணி ஆகிய உணவு வகைகளில் ஏறத்தாழ 25% முழுதானிய மாவு கலந்து தயாரிக்கபட்ட உணவு தேர்வுகள் 'புரோட்டா வாலா'வில் கிடைக்கின்றன.

"ஒன்பது ஆண்டுகளுக்கு முன், நாம் தொடங்கிய காலத்திலிருந்தே, முழுதானிய புரொட்டா வகைகளைத் தயாரிக்க முயற்சி செய்துள்ளோம், ஆனால் அதில் வெற்றி அடையவில்லை. சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் உதவியால் ரூசியோடு ஆரோக்கியத்தையும் வழங்கும் உணவு தயாரிப்பு முறையை கண்டறிந்து அதைச் செயல்படுத்துகிறோம்," என்றார் புரோட்டா வாலாவின் இயக்குநர் திரு ஜோசஃப் லீ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!