சென்னையில் சிங்கப்பூர் விழா

சென்னையில் கர்நாடக இசை, நடன நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போன மதிப்புமிக்க அரங்கமான சென்னை மியூசிக் அகாடமியில் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் தமது வருடாந்திர கர்நாடக இசை, நடன நிகழ்ச்சியை கடந்த வாரம் அரங்கேற்றியது. இம்மாதம் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்ற விழாவில் கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்தனர். இவ்வாண்டு சிங்கப்பூர் தூதர கத்தின் (Consulate General of Singapore) ஆதரவில் இந்திய, சீன, மலாய், மேற்கத்திய இனத்த வர்களைச் சார்ந்த இசைக் கலை ஞர்களை இணைத்த ‘லயா சங்கமம்’ என்ற புதுமையான நிகழ்ச்சியும் படைக்கப்பட்டது. இதில் இந்திய, சீன, மலாய், மேற்கத்திய அங்கங்கள் இடம்பெற்றன.

‘அலங்கார்’ எனும் தலைப்பில் இசை, நடன விழா நடைபெற்றது. மேற்கு வங்க கிராமிய இசை நிகழ்ச்சி உட்பட தென்னிந்திய, வட இந்திய பாரம்பரிய இசை, நடன படைப்புகளும் நிகழ்ச்சியை அலங்கரித்தன.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் ‘அலங்கார்’ இசை, நடன விழாவில் கதக் நடனமாடிய ஹிடல் சவ்ஹான். படம்: சிஃபாஸ்