லிட்டில் இந்தியாவில் ருசியான $3 பிரியாணி

இர்ஷாத் முஹம்மது

மலிவான விலையில் ருசியான பிரியாணியைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

உங்களுக்காகவே லிட்டில் இந்தியாவில் அறிமுகம் கண்டுள்ளது 'நவாப்'ஸ் பிரியாணி'. கோழி பிரியாணி $3, இறைச்சி பிரியாணி $4! 'சில்லி சிக்கன்', 'பெப்பர் சிக்கன்' போன்ற உணவு வகைகளை $2.50 பெறலாம்.

முஸ்தபா செண்டர் அமைந்துள்ள சையத் ஆல்வி சாலைக்கு அருகில் 73 டெஸ்கர் சாலையில் இந்தப் புதிய உணவகம் அமைந்துள்ளது. துடிப்புடனும் வண்ணமயத்துடனும் உள்ள லிட்டில் இந்தியாவின் புதிய உதயமாக நவாப்'ஸ் பிரியாணி அடியெடுத்துவைத்துள்ளது.

பல்வேறு வகையான உணவு வகைகளுக்கும் விதவிதமான உணவகங்களுக்கும் பெயர்போன கலாசார மையமாக லிட்டில் இந்தியா உள்ளது என்றால் அது மிகையல்ல.

மிகவும் குறைவான விலையில் பிரியாணி விற்கும் கடையின் உரிமையாளர் முகம்மது ஃபாரூக் அப்துல்லா, தமது கடையைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அவ்வாறு செய்வதாகக் குறிப்பிட்டார்.

"இந்த விலையில் விற்றாலும் லாபம் ஈட்டமுடியும். குறைவான லாபமாக இருந்தாலும் செலவினங்களை ஈடுசெய்யமுடியும்," என்றார் அவர்.

"ஹலால் விலையில் ஹலால் உணவை விற்பதே எங்கள் கடையின் தாரக மந்திரம்," என்று கூறிய ஃபாரூக், 1987ஆம் ஆண்டு முதல் அவரது தந்தை இந்த உணவு, பான துறையில் இருந்து வந்துள்ளதைப் பெறுமையுடன் எடுத்துரைத்தார்.

ஓவன் சாலையிலுள்ள பெக் கியோ சந்தை, உணவங்காடி நிலையத்தில் இந்திய முஸ்லிம் உணவு விற்பனையாளராக அவரது தந்தை இருந்ததை அவர் சுட்டினார்.

முப்பது ஆண்டுகள் கழிந்தன; உணவங்காடியிலிருந்து உணவகம் அமைத்துள்ளார் ஃபாரூக். செம்பாவாங் பகுதியில் முன்பு உணவகம் நடத்திய அவர், தற்போது அவர் வசிக்கும் யீசூன் பகுதியில் ஒரு கடையை நடத்திவருகிறார்.

இம்மாதம் 16ஆம் தேதி திறப்புவிழா கண்ட நவாப்'ஸ் பிரியாணி பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பிரியாணி $3க்கு விற்கப்படுகிறதா என்று ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதுடன் சிங்கப்பூரின் பல பகுதிகளிலிருந்தும் உணவு பிரியர்கள் அக்கடையை நோக்கி வந்து வயிறார சாப்பிட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இந்தியர்கள் சங்கமிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் உணவகம் அமைந்திருந்தாலும் அனைத்து இனத்தவர்களையும் கவர்ந்துவருகிறது 'நவாப்'ஸ் பிரியாணி'. அந்தக் கடையின் வாடிக்கையாளர்களில் மலாய்காரர்களும் சீனர்களும் அதிகம் அங்கம் வகிக்கின்றனர்.

குறைந்த விலைப் பிரியாணி என்றால் ஏதாவது ஒரு வகையில் குறைகள் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் அந்தக் கடைக்குச் சிலர் வந்துள்ளனர் என்றும் கூறலாம்.

"இவ்வளவு விலை மலிவான பிரியாணியை நான் எங்கும் கண்டதில்லை. குறைந்த அளவில் உணவு வழங்கப்படும் அல்லது சுவை இல்லாமல் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லாமல் மகிழ்ச்சியாக சுவைமிகுந்த இந்திய உணவை சாப்பிட்டேன்," என்றார் தமது குடும்பத்தினருடன் உணவருந்த வந்திருந்த 43 வயது ஜானத்தன் சூ.

"ஆர்வமிகுதியால் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் வந்தேன். இப்போது என் நண்பர்களுக்கு இதைப் பற்றி கூறி அழைத்து வருவேன்," என்று அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் குடியிருப்போரும் அந்த வட்டாரத்தில் வேலை செய்பவர்களும் புதிய கடையை வரவேற்றனர்.

"குறைந்த விலையில் தரமான உணவு என்பது என்னை கவர்ந்த ஒன்று. உணவின் அளவு போதுமானதாக உள்ளது. சுவையும் பிரமாதம்," என்றார் லிட்டில் இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரியும் 37 வயது முகம்மது இஸ்மாயில்.

"மலிவான உணவு என்றால் உணவின் மூலப் பொருட்களின் தரத்தில் குறைபாடு இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், நவாப்'ஸ் பிரியாணி அப்படி இல்லை. அரிசி, கோழி, இறைச்சி என்று அனைத்தும் நல்ல தரத்தில் இருக்கிறது. குறிப்பாக, எண்ணெய் மிகுதி இல்லாமல் உணவு சமைக்கப்படுகிறது," என்றார் 53 வயது முத்துகுமார் சிவனான்டி.

"இதுவரை நான் சாப்பிட்ட பிரியாணி உணவில் ஆக மலிவானது இதுவே. அதுவும் மத்திய வட்டாரத்தில் சுவையான உணவு இந்த விலைக்குக் கிடைத்தது முதல்முறை. சுத்தமான கடையாக இருப்பதும் நான் மீண்டும் இங்கு வந்து சாப்பிடுவதற்குக் காரணமாக இருக்கும்," என்றார் திரு {ராம் பிரகாஷ், 31.

இன்னும் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கவரும் நம்பிக்கைக் கொண்டுள்ளார் உணவக உரிமையாளர் ஃபாரூக்.

"குறைவான விலையில் விற்பது என்றால் அதிக எண்ணிக்கையில் நான் விற்கவேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்டமுடியும்," என்றார் அவர்.

உணவகத்தில் விற்பனை செய்வதோடு வீடுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் விநியோகம் செய்வதும் நவாப் பிரியாணியின் செயல்பாடுகளாகும்.

கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் கூடுதல் கட்டணமின்றி விநியோகம் செய்து வருகின்றனர்.

தினந்தோறும் சுமார் 500 பிரியாணி விற்கும் நவாப்'ஸ் பிரியாணிக் கடையில், வாரயிறுதிகளில் 1,000 பிரியாணி வரை விற்பனையாகிறது.

எதிர்வரும் காலங்களில் மத்திய சமையலறையைத் திறப்பதற்கான திட்டம் உள்ளது என்று கூறிய திரு ஃபாரூக், தற்போது தமது குடும்பத்தாரின் உதவியுடன் உணவுகள் சமைத்துவருகிறார்.

படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!