வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவோம்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக மரினா பேயிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளை, அதிலும் குறிப்பாக நள்ளிரவில் இடம்பெறும் வாண வேடிக்கையைப் பார்க்க விரும்புவோர் கீழ்க்காணும் இடங்களில் இருந்து அதைத் தெளிவாகக் காணலாம்.

எஸ்பிளனேட் தியேட்டர்ஸ்

ஆன் தி பே

உயரமான இடத்தில் இருந்து வாண வேடிக்கையைக் கண்டு ரசிக்க இங்கு குடும்பத்தோடு செல்லலாம். ‘சிங்கப்பூர் ஸ்கை லைன்’ என்றழைக்கப்படும் சிங்கப் பூரின் நவீன, பாரம்பரிய கட்ட டங்கள் வண்ண ஒளியில் பிரகா சிக்கும் வகையில் வாணவேடிக் கைகள் அமையவிருக்கின்றன. மரினா பே வாட்டர்ஃப்ரன்ட் ப்ரோமெனாட்

காற்றோட்டமாக, கரையோரப் பகுதியில் இயற்கையை ரசித்துக் கொண்டே புத்தாண்டைக் கொண் டாட விரும்புகிறவர்கள் இங்கு செல்லலாம். புத்துணர்ச்சியான காற்றைச் சுவாசிக்கும் அதே சம யத்தில் கண்களைக் கவரும் வகையில் அமையவிருக்கும் வாணவேடிக்கைக் காட்சிகள் புத்தாண்டைப் பிரம்மாண்டமாக தொடங்கி வைக்கும்.

பே ஈஸ்ட் @ தி கார்டன்ஸ் பை தி பே

‘சிங்கப்பூர் ஃபிளையர்’, மரீனா பே சேன்ட்ஸ் ஆகிய இடங்களுக்கு அருகே அமைந்துள்ள பே ஈஸ்ட்,

புத்தாண்டைக் கொண்டாடுவதற் கான ஒரு சிறந்த இடம். தொடர்ந்து சில நிமிடங்களுக்கு இடம்பெறும் வாண வேடிக்கை களை விரிவான பார்வையுடன் ரசிக்க இவ்விடம் வழிவகுக்கும். ஹெலிக்ஸ், பெஞ்சமின் ‌ஷியர்ஸ் பாலங்கள்

புத்தாண்டுக்கு முந்திய நாள் கொண்டாட்டத்தின்போது இந்த இரு இடங்களும் மக்களிடையே வெகு பிரபலம். மரினா பே மிதக்கும் மேடைக்கு அருகில் உள்ள இவ்விரண்டு பாலங்களும் சௌகரியமாக வாண வேடிக்கை யைக் கண்டுகளிக்க உதவும்.

மரினா அணைக்கட்டு

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் இடத்திற்குச் சற்று தூரமாக இருந்தாலும் ‘சிங்கப்பூர் ஃபிளையர்,’ மரினா பே சேன்ட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள வண்ண வண்ண விளக்குகளுடன் பின்னணியில் அமைந்துள்ள கட்டடங்களையும் காண இந்த இடத்திற்கு வரலாம்.

எஸ்பிளனேட், ஜூபிலி பாலம்

புத்தாண்டு குதூகலத்தைக் கூட்டும் இவ்விடம் வானத்தை அலங்கரிக்கும் வாண வேடிக்கை யைத் தெளிவாக காட்டும். அந்தக் காரணத்திற்காகவே பொதுமக்கள் திரண்டுவரும் இவ்விடத்தில் ஒரு இடம்பிடிக்க புத்தாண்டு நிகழ்ச் சிக்கு முன்கூட்டியே வருவது சிறப்பு.

தி புரோமோன்டரி

பச்சைப்பசேல் எனக் காட்சி அளிக்கும் இவ்விடத்தில் பாயை விரித்து அமர்ந்துகொண்டு நெருங்கியவர்களுடன் வாண வேடிக்கையைக் கண்டு மகிழலாம். மரினா பே சேன்ட்ஸ், தி சிங்கப்பூர் ஃபிளையர், கலை அறிவியல் அரும்பொருளகம் ஆகிய இடங் களை இங்கிருந்து தெளிவாகக் காணலாம்.

மரினா பே மிதக்கும் மேடை ‘டரம்’ இசைக்கருவி, ஆடல், நெருப்பு சாகசங்கள் ஆகியவற்று டன் வாண வேடிக்கையைக் காண இங்கு செல்லலாம். மக்களோடு மக்களாக இப்புத்தாண்டை வர வேற்க இவ்விடம் ஒரு சிறந்த தளம்.

புத்தாண்டைக் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் அனைத்து நிகழ்ச்சி களின் தகவல்களைத் தெரிந்து கொள்ள https://www.marina baycountdown.sg/ எனும் இணையத்தளத்தை நாடலாம். செய்தி: வைதேகி ஆறுமுகம்