ஆரவாரப்படுத்த வருகிறது ‘இந்திய வாரம்’

இம்மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இடம்பெற உள்ள முதலாவது ‘இந்திய வாரம்’, கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற் கும் இந்தியாவில் எவ்வளவு முக் கியத்துவமும் மதிப்பும் அளிக்கப் படுகிறது, நாடு கடந்தும் அவை எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளன என்பதை வெளிக்காட்டு வதாக அமையும். பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய ‘இந்திய வாரம்’, சன்டெக் சிங்கப் பூர் அனைத்துலக மாநாட்டு, கண் காட்சி மையத்தில் இடம்பெறும். ஆயுர்வேதம், சினிமா, உணவு, வாழ்க்கைபாணி, கைவினைப் பொருட்கள், இலக்கியம், இசை, சுற்றுலா, யோகா என இந்தியர் களின் வாழ்வில் ஒன்றிப்போன அம்சங்களை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கும்.

சிங்கப்பூர் இந்தியத் தூதரகத் தின் ஆதரவுடன் தமிழ் முரசு நாளிதழ், தப்லா! வார இதழ், டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இம்மாதம் 26ஆம் தேதி பேராசிரியர் சாலமன் பாப்பையா, திரு ராஜா, திருமதி பாரதி பாஸ்கர் உள்ளிட்ட வர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்றம் இடம்பெறும். நுழை வுச்சீட்டு விலை $18 முதல் $28 வரை. https://pattimandram. eventbrite.sg என்ற இணையத் தளம் மூலமாக நுழைவுச்சீட்டு களை வாங்கலாம். பிகானெர்வாலா, மக்கான் மும்பை, ஸ்பைஸ் கிரில், சிவம் ரெஸ்டாரன்ட், மைராஸ் போன்ற சிங்கப்பூரின் பிரபல இந்திய உணவகங்களும் முகாமிடவுள்ள தால் உணவுப் பிரியர்கள் நிகழ்ச் சிக்குப் படையெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.