சிங்கப்பூரில் ‘விழிச்சுடரே’ நாட்டிய நாடகம்

மகாகவி பாரதியின் பெண்ணிய படைப்பு பரிமாணங்களை இன் றைய பெண்களின் கண்ணோட்டத்தில் ஆராயும் வகையில் ‘மன்ச் புரொடக்‌ஷன்ஸ்’, ‘விழிச்சுடரே’ என்ற இயல், இசை, நாட்டியம் கலந்த முத்தமிழ்க் காவியத்தை நாளை 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விக்டோரியா கலையரங்கில் இரவு 7 மணிக்கு அரங்கேற்றவிருக் கிறது. பாரதியாரின் கவிதைகளைக் கோத்து, திரு கே. ஹரிப்பிரசாத் தின் இசையில், திரு பாலகுருநாத னின் நடன அமைப்பில், குமாரி விஜயலட்சுமியின் கதை உரு வாக்கத்தில் அரங்கேறும் ‘விழிச்சுடரே’ நாடகம் முற் றிலும் இளையர்களால் தயாரிக் கப்பட்ட இசைக் காவியமாகும்.

இதில் முக்கிய கதாபாத்திரமான மகாகவி பாரதியாராக நடிப்பவர் உள்ளூர் தொலைக் காட்சிப் பிரபலம் திரு விஷ்ணு ஆனந்த். இந்நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு அவசியம். நுழைவுச் சீட்டுகளை ‘சிஸ்டிக்’ இணையத்தளத்தில் (https:// www.sistic.com.sg/events/ cvc0119) பெற்றுக்கொள்ள லாம் அல்லது அதன் செயலி யிலோ பெற்றுக்கொள்ளலாம். நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்களுக்கு 8112 9643 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை