சுடச் சுடச் செய்திகள்

மாண்டலின் இசை நிகழ்ச்சி

மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீனிவாசை நினைவுகூரும் வகையில் அவரது 50வது பிறந்த நாளையொட்டி சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந் தும் இசைக் கலைஞர்கள் அதில் பங்கேற்க உள்ளனர்.
மார்ச் மாதம் 2ஆம் தேதி எஸ்பிளனேட் கான்செர்ட் ஹாலில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் யு.ராஜேஷ் (மாண்டலின்), புர்பாயன் சாட்டர்ஜி (சிதார்), உஸ்தாத் பஸல் குரே‌ஷி (தபேலா), ஸ்டீபன் தேவஸி (கீபோர்டு), பீட் லாக்கெட் (டிரம்ஸ்), பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோர் இசை விருந்து படைக்கவுள்ளனர்.
ஆர்ட் காம்பஸ் நிறுவனம், ஸ்ரீனிவாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வேர்ல்டு மியூசிக் ஆகிய நிறு வனங்கள் இணைந்து அக்ரோ கார்ப் இன்டர்நேஷனல் நிறுவனத் தின் ஆதரவுடன் நான்காவது ஆண்டாக ‘தி மாண்டலின் & பியாண்ட் 2019’ எனும் இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய் துள்ளன. நிகழ்ச்சிக்கான நுழை வுச்சீட்டுகளை www.sistic.com என்ற இணையப்பக்கத்தில் பெற் றுக் கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு 90795078 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.