பதின்ம வயதுப் பெண்களைப் பாதிக்கும் சமூக ஊடகங்கள்

சமூக ஊடகப் பயன்பாட்டால், பதின்ம வயது ஆண்களைவிடப் பதின்ம வயதுப் பெண்கள் இரண்டு மடங்கு அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
‘இ-கிளினிக்கல்மெடிசின்’ என்ற சஞ்சிகையில், சமூக ஊடகங்களுக்கும் மன அழுத்த அறிகுறிகளுக்குமான தொடர்பை விளக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரிட்டனின் ‘யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனை’ சேர்ந்த ஆய்வாளர்கள் பதின்ம வயதினர்  11,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், பதின்ம வயதுப் பெண்கள் சமூக ஊடகங் களை அதிகமாகப் பயன்படுத் துவது தெரியவந்திருக்கிறது. 
சுமார் 40%  பெண்கள் ஒரு நாளில் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுடன் ஒப்பிடும்போது, பதின்ம வயதில் 20% ஆண்களே சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
பதின்ம வயது ஆண்களில் 10 விழுக்காட்டினரும் பெண்களில் 4 விழுக்காட்டினரும் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவ தில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களைக் குறை வாகப் பயன்படுத்துபவர்களில் 12 விழுக்காட்டினரிடமும் அதிகமாக பயன்படுத்துபவர்களில் 38 விழுக் காட்டினரிடமும் சுமார் ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக மருத்துவ ரீதியான மன அழுத்த அறிகுறிகள் தீவிரமாக  இருந் ததை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், பதின்ம வயதினரில் 40% பெண்கள், 28% ஆண்கள் ஆகியோரது தூக்கமும் சமூக ஊடகப் பயன்பாட்டால் பாதிக்கப் படுவதும் இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டால் இளையர்களிடையே மன அழுத் தம் ஏற்படுவதாக இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் குறிப்பிட்டுள்ளன. ஆனால், 75 விழுக்காட்டினரின் மன அழுத்தம் மோசமடைந்த பின்னரே கண்டுபிடிக்க முடிகிறது.
பதின்ம வயதினரிடையே உடல் உழைப்பு குறைந்திருப்பதும் அவர்களது மன அழுத்தத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதற்குத் தீர்வு காண்பதில் பள்ளிகளும் பெற்றோரும் முக்கிய பங்குவகிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.