திறனை வளர்த்தேன்; மனநிறைவு பெற்றேன்

கடந்த பத்து ஆண்டுகளாகச் சொந்தத் தொழில் நடத்திவரும் 63 வயது கே விஜயன் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் இருந்தார்.  ஏதாவது திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இருந்த அவருக்குத் தேசிய முதியோர் பயிற்சிக் கழகத்தின் வகுப்புகள் பற்றிய தகவல் கிடைத்தது. முதிய வயதுடையவர் என்றாலும் கல்விக்கு வயது ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது என்பது அவரது எண்ணம். அதன்படியே வகுப்புகளைப் பற்றிய தகவல்களைப் பெற்ற விஜயன், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தால் வழங்கப்படும் நீர்க் குழாய் பராமரிப்புக் குறித்த வகுப்பில் சேர்ந்தார். வாழ்நாள் கற்றலை தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள விஜயன் இது போன்று பல திறன் மேம்பாட்டு வகுப்புகளுக்குச் சென்று பயன்பெற்றுள்ளார். 

“எனது தனிப்பட்ட மனநிறைவிற்கும் வகுப்புகளால் எனக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற காரணங்களால் நான் இதில் ஈடு பட்டேன்,” என்றார் விஜயன். 

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டத் தின் மூலம் அவருக்குக் கிடைத்த உதவிநிதியைக் கொண்டு வகுப்புக் களுக்குச் சென்றார் விஜயன்.  நீர்க்குழாய் பராமரிப்பு வகுப்புக் களுக்குச் சென்ற விஜயன், இனி வீட்டில் நீர்க்குழாய் பராமரிப்பு வேலைகளைத் தாமே செய்துவிட முடியும் என்கிறார். அதனால் சேமிப்பும் ஆகிறது என்பது அவரது கருத்து.

“திறன் மேம்பாடு காண்பதால் பொருளியல் ரீதியில் சிறிய அளவில் சேமிப்புக் கிடைக்கிறது. இப்போது பழுதுபார்ப்பவர்களை நான் அழைக்கவேண்டியதில்லை,” என்றார் அவர். பலதரப்பட்ட திறன் மேம்பாட்டு வகுப்புகள் தேசிய முதியோர் பயிற்சிக் கழகத்தால் வழங்கப்படுகிறது.  மாறிவரும் பொருளியல் சூழ லில் செழித்தோங்க ஒருவர் புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக் கொள்வது இன்றியமையாதது. அந்த வகையில் வயது வரம்பின்றி வாழ்நாள் கற்றலில் துடிப்புடன் ஈடுபடுவதன் மூலம் பணியிலும் வாழ்விலும் வளர்ச்சி காணலாம். அந்த வரிசையில் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட தேசிய முதியோர் பயிற்சிக் கழகம் மூத்த சிங்கப்பூரர்களுக்குப் பல்வேறு கற்றல் வகுப்புகளை வழங்கி வருகிறது.

தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கலைக் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட உயர் கல்விக் கழகங்களும் சமூக அமைப்புகளுடனும் சேர்ந்து முதியோரின் அடிப்படைத் தேவை களுக்குப் பொருத்தமான பாடங் களை வழங்குகின்றன.

தகுதியுடைய முதியோர் இந்தப் பாடங்களில் சேர்ந்து கட்டணக் கழிவுடன் பயிலமுடியும். ஆயிரத்திற்கும் மேலான பயிற்சி வகுப்புகள் இருக்கும் நிலையில் இதன்மூலம் பலனடைந்த விஜயன் மேலும் பல பாடங்களைக் கற்க ஆவலுடன் இருக்கிறார். மின்சாரம், வீட்டுப் பராமரிப்பு போன்ற பாடங்களை ஏற்கெனவே பயின்றுள்ள அவர், தேசிய முதியோர் பயிற்சிக் கழகம் வழங் கும் மற்ற பாடங்களைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து கவனித்துவருகிறார். தமது வேலை நேரம் நீக்குப் போக்கானதாக இருப்பதால் விஜயனுக்கு இதுபோன்ற வகுப்புகளுக்குச் செல்ல வசதியாக இருப் பதாகத் தெரிவித்தார். 

“வாழ்நாள் கற்றலின் முக்கியத் துவத்தை அனைவரும் அறிந்து வாய்ப்புகளை அரவணைத்துக் கொள்ளவேண்டும். 
“மிகவும் பயன் தரக்கூடிய வகையில் அது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார் அவர். கல்வி கற்று திறனை வளர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதால் என்றென்றும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு கிடைப்பதாகவும் அவர் கூறினார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஓராண்டுவரை கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. படம்: இணையம்

07 Dec 2019

புதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுவரை கெடாமல் இருக்கும்

உலக அளவில் இத்தகைய மூன்றாவது அறுவை சிகிச்சை இது. படம்: அன்ஸ்பிளாஷ்

07 Dec 2019

ஒரே மாதிரி இரட்டையர்களுக்கிடையே விந்தக மாற்று அறுவை சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்காவது நாள் அவரது ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே ஆரோக்கியமாக உள்ள வளர்ப்பு நாய்கள், பூனைகளின் எச்சிலில் இருக்கக்கூடிய ஒரு பாக்டீரியா தொற்றினால் அந்த ஆடவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. படம்: பெக்செல்ஸ்

27 Nov 2019

வளர்ப்பு நாய் நக்கியதால் கிருமித்தொற்று; உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த ஆடவர்