நாசி லமாக்கைக் கொண்டாடும் கூகலின் வண்ணப் படம்

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பிரபலமாக இருக்கும் ‘நாசி லமாக்’கைச் சித்திரிக்கும் வண்ணப்படம் ஒன்று ‘கூகல்’ இணைய தேடுதள முகப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மலேசிய விவசாயிகள் பாரம்பரியமாக இதனைக் காலை உணவாக சாப்பிட்டு வந்ததாக கூகல் தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

சோற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சமைக்கப்படும் நாசி லமாக்கில் பலவகை இருப்பதாகவும் மலாய், சீன, இந்திய உணவு கலாசாரங்கள் நாசி லமாக்கில் ஒன்றிணைகின்றன என்றும் கூகல் கூறியது. நாசி லமாக் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் காணொளி ஒன்றும் தேடுதளத்தில் இடம்பெற்றது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை